Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கைதி 2, பட விவகாரம்: ட்ரீம் வாரியர் நிறுவனம் விளக்கம்

லோகேஷ்கனகராஜ் இயக்கிய கைதி 2 m  பாகம் பற்றிய கேள்விகளுக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட் டுள்ளது.

அது வருமாறு:

எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஸ் கனகராஜ் கதை, திரைக் கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளி வந்த கைதி திரைப் படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப் பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது.

அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்க வோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.

மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரனை முடிவு தெரியாமல், இ்த்திரைப் படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Actress AksharaGowda got Vaccinated

Jai Chandran

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “விசித்ரன்” பட ஆடியோ ரிலீஸ்

Jai Chandran

டி சீரிஸ் தயாரிப்பில் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend