Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டபுள் டக்கர் (பட விமர்சனம்)

படம் : டபுள் டக்கர்

நடிப்பு: தீரஜ், ஸ்மிருதி வெங்கட்,  கோவை சரளா, எம் எஸ் பாஸ்கர்,  முனிஷ்காந்த், காளி வெங்கட்,.  மன்சூர் அலிகான், சுனில் ரெட்டி, சாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த் , ஜார்ஜ் விஜய் , டெடி கோகுல்

தயாரிப்பு: ஏர் ப்ளிக்ஸ்

இசை: வித்யாசாகர்

ஒளிப்பதிவு: கௌதம் ராஜேந்திரன்

இயக்கம்: மீரா மகதி

பி ஆர் ஓ: நிகில் முருகன்

 

விபத்தில் பெற்றோரை இழக்கும் அரவிந்த் ( தீரஜ்) முகத்தில் தீக்காயம் ஏற்படுகிறது பெரிய பணக்காரனாக இருந்தும் அவனிடம் யாரும் பழக மறுக்கி றார்கள்.  இளம் பெண்  பாரு  (ஸ்மிருதி) மட்டும் அவனுடன் பழகுகிறாள். இவர்கள் நட்பு காதல் ஆகிறது. இந்நிலையில் வானத்து தேவதைகள் அரவிந்த் உயிரை பறிக்கிறார்கள். பின்னர் தான் அவர் 85 வயது வரை வாழக்கூடிய தகுதி வாய்ந்தவர் தவறுதலாக அவரது உயிரை பறித்த விஷயம் தேவதைகளுக்கு தெரிய வருகிறது. தன் உடலுக்கு உயிர் தரும் வரை உங்களை விட மாட்டேன் என்று தேவதைகளை மடக்கி வைத்துக் கொள்கிறார் அரவிந்த். இந்நிலையில் அவரது வாழ்வில் பல்வேறு திருப்பங்கள் நடக்கின்றன.  இறுதியில் அரவிந்த் உயிர் திரும்பியதா, தேவதைகள் கதி என்னவானது என்ற பல்வேறு கேள்விகளுக்கு பல டிவிஸ்ட் களுடன் படம் பதில் அளிக்கிறது.

லாஜிக் பார்க்காமல் மேஜிக்கான திரைக்கதையை கொண்டு டபுள் டக்கர் படம் உருவாகி இருக்கிறது. இது ஏன் இப்படி நடந்தது, அது ஏன் அப்படி நடக்கிறது என்ற கேள்வி யெல்லாம் கேட்காமல் இருந்தால் இப்படத்தை ஒரு குழந்தை போல் கைதட்டி ரசித்து பார்க்கலாம்.

படம் தொடங்கி சில காட்சிகள் சென்ற உடனேயே ஹீரோ தீரஜ் இறந்து விடுவதால்,  என்ன கதையை இப்படி தொடங்கி விட்டார்கள் என்று யோசிக்க வைத்து அடுத்த சில நிமிடங்களி லேயே லெப்ட்,  ரைட் என்ற இரண்டு அனிமேஷன் கதாபாத் திரங்களை கடவுளின் தேவதைகளாக அறிமுகம் செய்து அவர்கள் அடிக்கும்  லூட்டிகள் எதிர்பார்க்காத சுவாரசியத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்த சுவாரசியம் படத்தின் கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது,  இன்னும் சொல்லப்போனால் கிளைமா விற்கு பிறகும் தொடர்கிறது.

தீரஜ் புத்திசாலித்தனமாக ஒரு கதாபாத்திரத்தை அதுவும் குழந்தைகளுக்கு பிடிக்கும் கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்டு  ரசிக்கும்படி செய்திருக்கிறார். திடீரென்று ராஜா கதாபாத்திரத் தில் தீரஜ் வந்ததும் இவர் எப்படி வந்தார் என்ற சந்தேகம்  ஒரு பக்கம் திரைக்கதையை முடுக்கி  விடுகிறது. இந்த சஸ்பென்ஸ் எல்லாம் இங்கே உடைத்து விட்டால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் இருக்காது அதனால் குழந்தை களோடு சென்று இப்படத்தை பார்த்து சிரித்து என்ஜாய் செய்யுங்கள்.

இன்ப அதிர்ச்சியாக வந்து ஒரு பாடலுக்கு கிக்காக நடனமாடி  விருந்து படைக்கிறார் யாஷிகா ஆனந்த்.

முனிஸ் காந்த்,  காளி வெங்கட் இருவரும்  லெஃப்ட் ரைட் கதாபாத்திரத்தில் கலகலக்க வைக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் ஆக வரும் கோவை சரளா, கதாநாயகியின் தந்தையாக வரும் மன்சூர் அலிகான் அவரது கூட்டாளிகள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக சேர்ந்து சிரிக்க வைத்தே  தீர்வோம் என்று தங்கள் பங்குக்கு காமெடி வெடிகளை வெடிக்கிறார்கள்.

கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.

ஏர் பிளிக்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

குழந்தைகளை கவர்ந்தால் அவர்களுடன் பெற்றோர்களையும் தியேட்டருக்கு அழைத்து வந்த விட முடியும் என்ற ஃபார்முலாவை மனதில் வைத்து படத்தின் திரைக் கதையை அமைத்து அதை வெற்றி கரமாகவும் செய்திருக்கிறார் இயக்குனர் மீரா மகதி.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு கை கொடுத்திருக்கிறது. வி எஃப் எக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் பெரும் பங்கு வகிக்கிறது

வித்யாசாகர் இசை நீண்ட இடைவெளிக்கு பிறகு காதில் ரீங்காரமிடுக்கிறது

டபுள் டக்கர் – குழந்தைகளுக்கு கோடையில் கிடைத்த  டபுள் சிக்சர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Seethayanam movie Team wishes everyone

Jai Chandran

திரில்லார் காதல் கதையாக உருவாகிறது தராதிபன்

Jai Chandran

Kanne En Kanne video song from Endravathu Oru Naal is here

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend