Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டோபாமைன் @2.22 (பட விமர்சனம்)

படம் : டோபாமைன் @2.22 (Dopamine@2.22)

நடிப்பு: திரவ்,  நிகிலா,  விஜய்,  விபிதா, ராகவ், சாம்சன், சத்யா, சக்திவேலன்

தயாரிப்பு: ஹாஸ்டேக்  எஃப் டி எப் ப்ரொடக்ஷன்ஸ்

இசை: ஆலன் சோஜி

ஒளிப்பதிவு: பிரித்திவ் ராஜேந்திரன்

இயக்கம்: திரவ்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

ரிலீஸ்: அமேசான் பிரைம் மோடி டி தளம்

அடுக்குமாடி குடியிருப்பில். வசிக்கும் மூன்று குடும்பத்தை பற்றிய கதையாக  உருவாகி இருக்கிறது டோபாமைன் 2.22.

ஒரு வேலையை செய்யும்போது அதில் வெற்றி கிடைத்தால் மீண்டும் மீண்டும் அதே வெற்றியை பெற நினைப்போம் அப்படிப்பட்ட ஒரு நினைப்பை உருவாக்க மூளையில் சுரக்கும் ஒரு  திரவத்துக்குத்தான் டோபாமைன் என்று  பெயர்  என இயக்குனர் திரவ் பட டைட்டிலுக்கு  விளக்கம் அளித்தார்

.கணவன் வெளிநாட்டில் வேலை செய்ய வீட்டில் மகனுடன் இருக்கும் பெண் அக்கம் பக்கத்து வீட்டு சங்கதிகளை புரளி பேசி காலத்தை கடத்துகிறார், ஆன்லைன் சூதாட்டத்திற்கு  அடிமையான நபர் ஒருவர் நண்பர்களுக்கு போன் செய்து பொய் சொல்லி பணத்தை கடனாக கேட்பதை வேலையாக வைத்திருக்கிறார், பாய்பிரண்டுடன் கோபித்துக் கொண்டு அவனை போலீசில் மாட்டி விடுகிறார் ஒரு பெண். இதற்கிடையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கொலை  குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறது. இந்த கொலை எப்படி நடக்கிறது யார் செய்தது என்ற சஸ்பென்ஸ்தான்  கிளைமேக்ஸ்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பு,  சென்னையில் சில தெருக்கள் என லொகேஷன் வைத்துக்கொண்டு  படம் முழுவதையும் இயக்கி முடித்திருக்கிறார் திரவ்  இவரே ஆன்லைன் ரம்மி விளையாடும் சூதாட்டக்காரராகவும் நடித்திருக்கிறார்

மனைவிக்கு உடம்பு சரியில்லை,, கடன் தொல்லை என்று பொய் சொல்லி நண்பர்களிடம் கடன் கேட்டு  நச்சரிக்கும் திரவ் போன்ற கேரக்டர்களை வாழ்க்கையில் அடிக்கடி நாம் சந்தித்திருக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. அந்த பாத்திரத்தை கச்சிதமாக  செய்து ரசிக்க வைக்கிறார்.

பாய் பிரண்ட்டை போலீசில் மாட்டிவிடும்  கேர்ள் ஃப்ரெண்ட், மகனிடம் இருந்து செல்போனை வாங்குவதற்கு மல்லுக்கட்டும் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்களும் எதார்த்தத்தை மீறவில்லை.

செல்போனால் இன்றைய இளம் தலைமுறைகள் கெட்டவர்களாக மாறும் விதத்தை ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆலன் சோஜி இசை, பிரிதிவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு சுமார்.

படத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு முகம் தெரிந்த நடிகர் நடிகை யாரும் இல்லாதது  படத்துக்கான ஈர்ப்பை  குறைக்கிறது.  ஆனாலும் சொல்லப்பட்டிருக்கும் கருத்து  வருங்கால தலைமுறையின் நல்வாழ்விற்கு மிக முக்கியமான கரு. அதற்காக இயக்குனர் திரவுக்கு வாழ்த்து சொல்லலாம்.

இப்படம்  தியேட்டருக்கு வராமல்  நேரடியாக  அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில்  வெளியாகிறது.

டோபோமைன் 2.22 – சமுதாய சீர்கேடுகள்.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

 

Related posts

கன்னிராசி படத்தின் தடை நீங்கியது..நாளை முதல் தியேட்டரில் ரிலீஸ்..

Jai Chandran

MohanRaja Completes 20 Years director

Jai Chandran

100 % தமிழ் ‘ஆஹா” ஓடிடி தளம் துவக்க விழா !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend