படம்: ஹிட்லர்
நடிப்பு: விஜய் ஆண்டனி, ரியா சுமன், சரண்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், தமிழ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, நரேன்
தயாரிப்பு: டி டி.ராஜா, டி.ஆர். சஞ்சய்குமார்
இசை: விவேக் மெர்வின்
ஒளிப்பதிவு: நவீன்குமார்
இயக்கம்: தனா.எஸ். ஏ.
பி ஆர் ஒ: சதீஷ் (AIM)
வேலை தேடி சென்னை வரும் விஜய் ஆண்டனி நண்பர்.கிங்ஸ்லி அறையில் தங்குகிறார். இந்நிலையில் மந்திரி சரண்ராஜ் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தொகுதி மக்களுக்கு.பணம் .பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கான பணத்தை அட்டை பெட்டியில்.மறைத்து மின்சார ரெயிலில் அடியாட்களிடம் கொடுத்து அனுப்புகிறார். அந்த பணம்.ரெயிலிலேயே கொள்ளை போகிறது. கொள்ளையடிப்பது யார் ? எதற்காக கொள்ளை போகிறது என்பதை கண்டுபிடிக்கும் வேலையில் கவுதம் மேனனின் போலீஸ் படை இறங்குகிறது. அதன்.பிறகு நடப்பது என்ன என்பதற்கு.கிளைமாக்ஸ் பதில் .சொல்கிறது.
விஜய் ஆண்டனி வேறு படமொன்றில் நடித்தபோது விபத்தில் சிக்கி மீண்ட பிறகு நடித்த படம் ஹிட்லர். ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரிபுதிரி செய்திருக்கிறார்.
ரெயிலில் பல அட்டை பெட்டியில் வரும் கோடிக்கணக்கான பணத்தை ஒரேயொருவரால் எப்படி கொள்ளையடிக்க முடியும் என்ற கேள்வி பெரிதாக எழுகிறது. அதற்கான விடை இடைவேளைக்கு பிறகு கிடைக்கிறது. அதுவொரு சஸ்பென்ஸ் என்பதால் இங்கு உடைப்பது சுவாரஸ்யத்தை குறைத்து விடும்.
விஜய் ஆண்டனி மீது சந்தேகப்பட்டு அவரை போலீஸ் அதிகாரி கவுதம் மேனன் கண்காணிக்க தொடங்கியதும் வேகம் கூடுகிறது..
ரியா சுமனுடன் விஜய் ஆண்டனியின் ரொமான்ஸ் காட்சியில் நெருக்கம் இல்லாவிட்டாலும் ரசனை இருக்கிறது. ரெயிலில் இருவருக்குமான ரொமான்ஸ் அலைபாயுதே படத்தில்.மாதவன் செய்த ரோமன்சை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சரண்ராஜ் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஆக்சன் காட்சிகள் எதுவும் இல்லை வெறும் பேச்சு தான். வயதும் ஆகிவிட்டது என்பதால் அவரே ஆக்சன் காட்சியை தவிர்த்து விட்டாரோ என்று தோன்றுகிறது
கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்தாலும் தனது ஸ்டைலான வசனத்தையும் நடிப்பையும் விட்டுக் கொடுக்கவில்லை.
ஐஸ்வர்யா தத்தா ஐட்டம் பாடல் ஒன்றில் செம ஆட்டம் ஆடி அசர வைக்கிறார்.
டி டி.ராஜா, டி.ஆர். சஞ்சய்குமார் தயாரித்திருக்கின்றனர்.
ஆக்சன் ரொமான்ஸ் அரசியல் கலந்து கமர்ஷியலாக இயக்கி இருக்கிறார் தனா எஸ் ஏ.. படத்தின் கரு அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் படத்தை ஞாபகப்படுத்துகிறது.
நவீன்குமார் ஒளிப்பதிவு பளிச். முதல் காட்சியில் பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் நடக்கும் காட்சி மலைப்பு.
விவேக் மெர்வின் இசை படத்துக்கு வேகம் கூட்டுகிறது.
ஹிட்லர்- ஆக்ஷன்காரன்.