Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“டெஸ்ட்” படத்தில் நயன், மாதவன், சித்தார்த் நடித்தது எப்படி? சஷிகாந்த் ருசிகர பேட்டி

Netflix, ஒய் நாட் ஸ்டுடியோஸ் புரடக்ஷன் சக்கரவர்த்தி, ராமச்சந்திரா, எஸ் சஷிகாந்த் தயாரிக்கும் டெஸ்ட் படத்தை எஸ்.  சஷிகாந்த் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படம்.

மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 4ம் தேதி உலகம் முழுவதும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டெஸ்ட் படம் வெளியாகிறது.

டெஸ்ட் படம் உருவானது பற்றி இயக்குனர் சஷிகாந்த் கூறியதாவது:
உலகளாவிய நெட் ப்ளிக்ஸ் ஒடி டி தளம் மூலமாக டெஸ்ட் படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நெட் பிலிப்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. யாரெல்லாம் நெட்ப்ளிக்ஸ் இணைப்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் டெஸ்ட் படத்தை பார்க்கலாம்.

மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார்கள்.
டெஸ்ட் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டை குறிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அதாவது மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் எல்லோருமே தாங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை டெஸ்ட் ஆக பரிசோதித்து தங்களை யார் என்பது அறிகிறார்கள்.

இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். காவியத் தலைவன் என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்தாத்துடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போதே அவரிடம் நான் படம் இயக்கும் ஆர்வத்தில் உள்ளது பற்றி கூறி, நான் இயக்கம் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்போதே அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். கிரிக்கெட்டில் அவருக்கு ஆர்வம் உள்ளது. கதாபாத்திரத்தை கேட்டவுடன் இன்னும் ஆர்வம் ஆகிவிட்டார். தனது எதார்த்தமான நடிப்பை இதில் அவர் வெளியிட்டிருக்கிறார். என்னதான் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்தாலும் முறைப்படி அவர் ஆறு மாதம் கிரிக்கெட் பயிற்சியாளரிடம் டயிற்சி பெற்ற பிறகுதான் இந்த படத்தில் கிரிக்கெட் வீரராக சித்தார்த் நடித்தார்.

நயன்தாராவிடம் டெஸ்ட் படத்தில் அவரது கதாபாத்திரத்தை சிறிது விளக்கியபோது அதனை புரிந்து கொண்டு உடனடியாக நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதற்கு மேல் அவரிடம் விரிவாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. நான் சொன்ன கதை பிடித்திருந்தது , அதை மனதில் வாங்கிக்கொண்டு தனது இயல்பான மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கிறார். அவரிடம் அவரது கதாபாத்திரத்தை சொல்லி ஓகே வாங்குவதற்குத்தான் காலதாமதம் ஆனது. நான் முதலில் அவரது கதாபாத்திரத்தை கூறியபோது அதைக் கேட்டுக்கொண்டு மேலும் கதாபாத்திரத்தை செதுக்க வேண்டும் , டெவலப் செய்ய வேண்டும் என்று  ஒவ்வொரு முறையும் கூறிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தில் திருப்தி அடைந்த பிறகுதான் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். இத்தனைக்கும் மாதவன் எனது நீண்டகால நண்பர்தான். கதாபாத்திரம்தான் அவர்களை எல்லாம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறது. மீரா ஜாஸ்மின் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே தங்களது சொந்த குரலில் பேசி இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதில் இன்னொரு முக்கிய அம்சமும் உள்ளது..அதாவது படப்பிடிப்பு நேரத்திலேயே லைவ் சவுண்ட் முறையில் எல்லா வசனங்களும் பதிவு செய்யப்பட்டன. இதனால் நயன்தாரா முதல் எல்லா நடிகர்களுமே தங்களது சொந்த குரலில் அதே இடத்தில் பேசி நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை மனதில் வைத்து தங்களது நேர்மையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். வசனத்தில் கொஞ்சம் பிசிறு ஏற்பட்டாலும் பின்னர் டப்பிங்கில் சரி செய்து கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்பதால் சூட்டிங் ஸ்பாட்டிலேயே கவனத்தை வைத்து வார்த்தைகளை எந்த விதத்திலும் தவறாக இல்லாமல் சரியாக பேசி உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள். இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாகவே எல்லோருக்கும் இருந்தது.

இப்படத்தில் கிரிக்கெட் டெஸ்ட் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. கிரிக்கெட் போட்டிகளை படமாக்கும்போது பெரிய சவாலாக இருந்தது. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எப்படி கேமராக்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு அதாவது  பந்து வீசுவதற்கு, பவுண்டரி செல்வதற்கு, ரன் எடுப்பதற்கு என்று வெவ்வேறு இடத்தில் காட்சிகளை படமாக்க கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல் கிரிக்கெட் டெஸ்ட்டை பார்க்கும் உணர்வை கொண்டு வரும் விதத்தில் பல்வேறு கேமராக்களை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டடி ருக்கிறது. இது படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை நிச்சயம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்ற சீன்களில் கிராபிக்ஸ் டெக்னிக் போன்றவையும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன இதற்காகவே 9 மாதம் ஆகி இருக்கிறது .
இது எந்த கிரிக்கெட்டர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேட்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அல்ல ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுமே ஹீரோக்கள்தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. அந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து இந்த படத்தில் நாங்கள் காட்சிகளாக வைத்திருக்கிறோம். அந்த காட்சிகளை பார்க்கும்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்கனவே இதுபற்றி அறிந்திருக்கிறோமே என்ற உணர்வு ஏற்படும். அது அவர்களை படத்தின் கதையோடு இணைத்து வைக்கும்.

சினிமா படப்பிடிப்பு என்றாலும் எல்லாமே டெஸ்ட் கிரிக்கெட்டின் விதிப்படி எடுக்கப்பட்டதுடன் இதில் நடித்தவர்களும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போன்றவற்றில் விளையாடி கிரிக்கெட் வீரர்களாக அனுபவம் பெற்றவர்கள்தான் நடித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் டெஸ்ட் படம் ஒரே நேரத்தில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகுமா என்று சிலர் கேட்கிறார்கள். இது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக எடுக்கப்பட்ட படம். அதில்தான் இப்படத்தை பார்க்க முடியும். தியேட்டரில் வெளியாகாது. ஏற்கனவே காட்பாதர் என்ற படம் ஓடிடியில் வெளியாகித்தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது இன்றைக்கும் அந்த படத்தை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல டெஸ்ட் படமும் மக்களிடமும் நல்ல வரவேற்புபெறும் என்ற நம்பிக்கையை இருக்கிறது.

படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே அனுபவசாலிகள் , நான் ஏற்கனவே படங்கள் தயாரித்திருந்தாலும் இயக்குனராக முதன்முறையாக இப்படத்தை இயக்குகிறேன். அதனால் படப்பிடிப்பு நேரத்தில் எந்த தடுமாற்றமும் இருக்கக் கூடாது என்பதற்காக. முன்னதாகவே நான் தியேட்டர் நடிகர்களை வைத்து இப்படத்தை படமாக்கி அனுபவத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு தான் நான் அனுபவம் வாய்ந்த நடிகர்களை இயக்குவதற்கு என்னை தயார்படுத்த முடிந்தது..

இவ்வாறு இயக்குனர் எஸ் சஷிகாந்த் கூறினார்.

 

 

சிட்டி ஆப் டிரீம்ஸ் ( ஆங்கில படவிமர்சனம்)

படம்: சிட்டி ஆப் டிரீம்ஸ்

Related posts

சீமான் தந்தை காலமானார் : கமல் இரங்கல்

Jai Chandran

‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி

Jai Chandran

இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend