கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டாக அமைந்த கல்யாணராமன் மற்றும் கடல்மீன்கள், மீண்டும் கோகிலா, மகராசமன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என.ரங்கராஜன். இவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. இவரது மனைவியின் பெயர் சக்குபாய்-82 வயது
இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் மகன் : G.N. குமாரவேலன் இவரும் திரைப்பட இயக்குனராக இருக்கிறார் (ஹரிதாஸ் படத்தை இயக்கியவர் – இப்பொழுது அருண்விஜய் நடிக்கும் சினம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.)
மகள்: பரமேஸ்வரி
இதற்கான இறுதி சடங்குகள் நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறவிருக்கிறது.
தந்தை ஜி.என்.ரங்கராஜன் மறைவு குறித்து ஜி.என்.குமரவேலன் சமூக வலை தள பக்கத்தில் குறிப்பிடும்போது, ’எனது தந்தை, எனது குரு, எங்கள் நேசத்துக்கு உரியவர்… இன்று காலை 8.45 மணி அளவில் காலமானார். எங்கள் குடும்பத்தினர் பலமுடன் இருக்க உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் அவசியம்’ என தெரிவித்திருக்கிறார்.