Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மறைவு: திரையுலகினர் அதிர்ச்சி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் பாரதி. 48 வயான இவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது.
சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மனோஜ். கடந்த சில நாட்களாக உடல் நல பாதிப்புக்குள்ளானார். இதய பாதிப்பால் அவதிப்பட்டுவந்த மனூஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மார்ச் 25ல் காலமானார்.

மனோஜ் திடீர் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய உள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோஜ் பாரதியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்: மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜாவுக்கு இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல்:
திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் மனோஜ் பாரதி. அவரை இழந்து வாடும் அவரது தந்தை பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தா ருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் கே.பாக்யராஜ்:

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கே.பாக்யராஜ். செயலாளர் லியாகத் அலிகான் , பொருளாளர் பாலசீகரன் மற்றும் நிர்வாகிகள்.வெளியிட்டுள்ள இரங்கல்:

பெரும் சோகம்
மீளாத்துயரம்
யார் ஆற்றினாலும் ஆறாது, தேற்றினாலும் தேறாது,
காலம் தான் அருமருந்தாக இருந்து எங்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இதயத்தை ஆற்ற வேண்டும்
தேற்ற வேண்டும்
ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும்,
தெரிவித்துக் கொள்கிறோம்.
மனோஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம் 🙏🏻

மனோஜ் பாரதி மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்:

உடல் நலக்குறைவால் சென்னையில் மறைந்த நடிகர்-இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர்.சி,குஷ்பு அறிக்கை:

மனோஜ் நம்முடன் இல்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. வெறும் 48 வயதில் அவர் எதிர்பாராத விதமாகக் காலமாகியிருப்பது வேதனையளிக்கிறது. அவரது தந்தை பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்கு கடவுள் உறுதுணையாக இருக்கட்டும். நீங்கள் நினைவு கொள்ளப்படுவீர்கள் மனோஜ்.

நடிகர் சரத்குமார் அறிக்கை:
தமிழ் இயக்குநரும், குடும்பத்தில் ஒருவர் என நெருக்கமான உறவாக இருப்பவருமான பாரதிராஜாவின் அன்பு மகன் மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
சமுத்திரம் திரைப்படத்தில் மனோஜின் மூத்த சகோதரராக நடித்த நாட்களை நினைவுகூர்கிறேன். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கான முத்திரையைப் பதிக்க இறுதி வரை போராடிய இளவலின் மறைவு வாழ்வின் நிலையற்ற நிலையைக் காட்டுகிறது. பாரதிராஜா அவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

இசையமைப்பாளர் இளையராஜா மனோஜின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தைகள் வரவில்லை.
இப்படியொரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று காலம் விதித்திருக்கின்ற காரணத்தால், மனோஜின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இயக்குநர் சங்கம் இரங்கல்:

இயக்குநர் இமயம் பாரதிராஜா வின் அன்பு மகன் இயக்குநர் நடிகர் மனோஜ் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.. அவரது திடீர் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
ஆர்.வி. உதயகுமார்
பேர்ரசு
சரண் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள்.

டி எம் ஜே ஏ கண்ணீர் அஞ்சலி:

இயக்குனர், நடிகர் மனோஜ் பாரதியின் திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தையும் மீளா துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆசை மகனை இழந்து ஈடு செய்ய முடியாத மாபெரும் சோகத்தில்
தவிக்கும் நம் மரியாதைக்குரிய
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சோகத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கமும் பங்கெடுக்கிறது.

ஆறுதல் படுத்தவே முடியாத இந்த பேரிழப்பால் கடும் சோகத்தில் உள்ள திருமதி மனோஜ் மற்றும் குழந்தைகள் குறிப்பாக இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு
ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
மனோஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் 🙏🏻

கவிதா
தலைவர்

கோடங்கி ஆபிரகாம்
பொதுச் செயலாளர்

ஒற்றன் துரை
பொருளாளர்

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் TMJA

*தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்(TMJA)*

இறுதி சடங்கு:

நடிகர்-இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரை கேசரினா டிரைவில் உள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா  இல்லத்தில்  திரை உலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.. அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது.

 

 

Related posts

நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜ் உதயா நீக்கம்: விளக்க அறிக்கை

Jai Chandran

தேடிச் சென்று உதவும் நல்ல உள்ளங்கள்: கார்த்தி பேச்சு

Jai Chandran

காட்டாளன் (பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend