படம்: ஹாஸ்டல்
நடிப்பு: அசோக்செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், கிரிஸ், சதிஷ், ரவிமரியா, முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, முண்டாசுபட்டி ராமதாஸ், யோகி
தயாரிப்பு: ஆர்.ரவீந்திரன்
இசை: போபோ சசி
ஒளிப்பதிவு: பிரவின்
இயக்கம்: சுமந்த் ராமகிருஷ்ணன்
பி ஆர் ஒ: சதீஷ் (AIM)
பழங்கால கட்டிடத்தில் கல்லூரி மாணவர் களின் ஹாஸ்டல் செயல்படுகிறது. கண்டிப்பான வார்டனாக நாசர், மாணவர் களை கண்காணிக்கும் செக்யூரிட்டியாக முனிஸ்காந்த் உள்ளனர். 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதால் கடன்கார னிடம் சிக்கிக்கொள்ளும் மாணவர் அசோக் செல்வன் பணத்தை திரட்டுவது எப்படி என்று தெரியாமல் திண்டாடு கிறார். அப்போது வரும் பிரியா பவானி, தன்னை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்துச் சென்றால் பணம் தருவதாக கூறுகிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு பிரியாவை பாய்ஸ் ஹாஸ்ட லுக்குள் அழைத்துச் செல்கிறார். ஹாஸ்டலுக்குள் பெண் நுழைவதை பார்த்து விடும் முனிஸ்காந்த் அதை நாசரிடம் போட்டுக் கொடுக்கிறார். உடனே நாசர் சோதனை செய்ய அறை அறையாக வருகிறார். அவருக்கு தெரியாமல் பிரியாவை அசோக் செல்வன் எப்படி மறைத்து வைக்கிறார். பின்னர் அவரை எப்படி ஹாஸ்டலிலிருந்து வெளியே அனுப்புகி றார் என்பதுடன் ஹாஸ்டலில் வரும் காமப்பேய் ஒன்றிடம் முனிஸ்காந்த் எப்படி சிக்கிக்கொண்டு படாதபாடுபடுகிறார் என்பதை கலகலப்புடன் படம் சொல்கிறது.
லாஜிக் மேஜிக் பார்க்காமல் ஜாலியாக தொடக்கம் முதல் இறுதிவரை சிரித்து விட்டு வரும் படமாக உருவாகியிருக் கிறது ஹாஸ்டல்.
ஹீரோ அசோக்செல்வனும் இவ்வளவு ஜாலியாக, காமெடியாக இதுவரை எந்த படத்திலும் நடித்ததுபோல் தெரிய வில்லை. செம லோக்கலாக இறங்கி நடித்து தனது பந்தாபார்ர்டி இமேஜை உடைத்திருக்கிறார்.
பிரியா பவானியை காசுக்கு ஆசைப்பட்டு ஹாஸ்டலுக்குள் அழைத்து வந்துவிட்டு அவரை நாசர் கண்ணில் படாமல் மறைக்க படும்பாடு அதிரடி காமெடிகள்.
அறைக்குள் பிரியா இருக்க அந்த கதவை நாசர் திறந்துக் கொண்டு வரும்போது அறைக்குள் இருக்கும் ஜன்னல் கம்பியை கழற்றிவிட்டு நாசர் கண்ணில் படாமல் பிரியா தப்பிப்பது பட படக்கும் காமெடி.
காட்சிகளே காமெடியாக அமைக்கப்பட்டி ருக்க பத்தாக்குறைக்கு சதிஷ், முனிஷ் காந்த் , ஹோகி போன்றவர்களையும் காமெடிக்குள் இறக்கிவிட்டிருப்பதால் அரங்கே சிரிப்பலையால் அதிர்கிறது.
கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் நாசரும் ஒரு கட்டத்தில் பேயிடம் சிக்கிக்கொண்டு டங்குவார் கிழிந்து தொங்கும் அளவுக்கு காமெடி செய்து வயிற்றை பதம் பார்க்கிறார்.
இன்னொருபுறம் ரவிமரியா ரவுடிகள் என்ற பெயரில் ஒரு காமெடி கூட்டத்தை மேய்த்துக் கொண்டு அல்லல்படுவதும் அவரும் பேயிடம் சிக்கி சீரழிவது வெடிச் சிரிப்பு.
அறந்தாங்கி நிஷா காமப் பேயாக வந்து முனிஸ்காந்த்திடம் ஃபர்ஸ்ட் நைட் டேட் ஃபிக்ஸ் செய்வதும் அவரை விடாமல் துரத்துவதுமாக ரன்னிங் கமென்ட்ரி போல் ரன்னிங் காமெடி செய்கிறார்.
ட்ரைடன்ட் ஆர்ட் ஆர்.ரவீந்திரன் படத்தை தயாரித்திருக்கிறார்.
சிரிபபாலேயே சீன்களை வெளுத்து வாங்கிருக்கிறார் இயக்குனர் சுமந்த் ராமகிருஷ்ணன். ஆங்காங்கே வரும் டபுள்மீனிங் வசனங்களுக்கு மியூட் போட்டிருந்தாலும் அதையும் மீறி மீனிங் எட்டிப் பார்க்கிறது.
பிரவின் கேமரா பளிச்சென காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
போபோ சசியின் இசையில் தேவா குரலில் கானா பாட்டு களைகட்டுகிறது
ஹாஸ்டல்- கவலையை ஓரம்கட்டிவிட்டு சிரித்துவிட்டு வரலாம்.