தேசிய விருது வென்ற காதல் கோட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் அகத்தியன். இவரது இளைய மகள் நிரஞ்சனி. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தார். இருவருக்கும் அப்படத்தில் பணியாற்றியபோது காதல் மலர்ந்தது. தற்போது இவர்கள் திருமணம் செய்யவுள்ளனர்.
துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த வருடம் பிப்ரவரி 28 அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அகத்தியனின் இளைய மகளான நிரஞ்சனி, தேசிங் பெரியசாமியைத் திருமணம் செய்யவுள்ளதை அகத்தியனின் மூத்த மகள் கிருத்திகாவின் கணவரும் இயக்குநருமான திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்?? கல்யாணம்! என ட்வீட் செய்து திருமணப் பத்திரிகையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.