Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இயக்குனரான தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் ’மாஸ்க்’

‘தமிழ் படம்’, ‘தூங்காநகரம்’, அஜித்தின் 50வது படம் ’மங்காத்தா’ போன்றபல வெற்றிப் படங்களைக் கொடுத்த கிளவுட் நைன் மூவீஸ் தயாரிப்பு நிறு வனம் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்றவர், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.
இவர் பிரபல அரசியல் தலைவர் மி.க.அழகிரி மகன். இதுவரை ஒரு தயாரிப்பாளராக இருந்த தயாநிதி அழகிரி தனது அடுத்தகட்ட நகர்வாக படைப்புலகிற்குச் சென்றிருக்கிறார். அவர் தற்போது ‘மாஸ்க்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.
தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதைச் சரியாகக் கையாளாவிட்டால் பயன் படுத்துவோருக்கும் ஆபத்தைத் தரக் கூடியது. இது சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.
இன்றைய கோவிட்-19 முடக்க கால கட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப் பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ள பேருதவியாக இருந்தன. பலவகையிலும் விழிப் புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வ மான நடவடிக்கைகளுக்கு உதவியதை அறிவோம்.ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த ஊடகத் தைப் பயன் படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் மாஸ்க்.
ஓர் இளைஞன், தான் பிரபலமடை வதற்காக, டிவிட்டர் மூலம் எதிர்மறை யான விஷயங்களையும், பல்வேறு நடப்பு நிகழ்வுகள் குறித்து விமர்சித்தும் பகுத்தறிவற்ற முறையில் செய்திகளைப் பதிவிடுகின்றான். இந்த செயலால் அவன் கண்காணிக்கப்பட்டு இறுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான்.
அவன், தான் செய்யும் செயல்களை உணர்கிறானா? அவனது வாழ்க்கைப் பயணத்தில் அவனுக்கு யார் உதவு கிறார்கள்? அவன் செய்தது உண்மையில் சட்டவிரோதமானதா? அதன் தாக்கம் என்ன? அவனது எதிர்காலம் என்ன? உலகைப் பார்க்க இதைவிட சிறந்த வழி இருக்கிறதா? என்பதையெல்லாம் ‘மாஸ்க்’ குறும்படம் கூறும். இப்படத் தைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள் இக்காலகட்டத்திற்கு ஏற்ற படம் என்று அனைவரும் கருத்துக் கூறி வாழ்த்தி வருகிறார்கள்.

தயநிதி அழகிரி இயக்கிய மாஸ்க் குறும்படத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீ டிவிட் செய்திருக்கிறார் நடிகர் அருள்நிதி.

Related posts

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

ஒரு சினிமா இயக்குனரின் எண்ணத்திலும் கைவண்ணத்திலும் உருவாகிய தஞ்சை கோவில் குடமுழுக்கு சிறப்பு பாடல்!

CCCinema

AnaleAnaleb Song From Jango Out Now

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend