Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

’சில்லு வாண்டுகள்’ குழந்தைகள் படத்துக்கு இசை அமைக்கும் தேவா

சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “ தேவா இசை அமைக்கிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:

சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார் – சுரேஷ் கே .வெங்கிடி. ஒளிப்பதிவு – ஆர்.எஸ்..விக்னேஷ். இசை – தேனிசை தென்றல் தேவா. எடிட்டிங்  காளிதாஸ். கலை இயக்குனர் ஜெயகுமார். நடனம்  அஜெய் காளிமுத்து. ஸ்டண்ட் கஜினி குபேரன். இணை தயாரிப்பு  மா.குமார் பொன்னுச்சாமி. தயாரிப்பு  தி.கா.நாராயணன்.

படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே.வெங்கிடி கூறியதாவது …இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதை விட பாடம் என்றுதான் சொல்லவேண்டும். வாழ்கையில் அடி மட்டத்திலுருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்கு தவறான வழிகளை பின்பற்றக் கூடாது என்பதை இதில் ஆழமாக சொல்கிறோம். அப்படி தனது தம்பிக்காக கெட்ட வழிகளை தேர்ந்தெடுக்கும் ஒரு அண்ணனின் கதை இது.

இந்த படம் குழுந்தைகளுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும்.இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மனநிலையில் சாதி,மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள் இருக்க கூடாது. அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை இன்றைய குழுந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்தே இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

 

நடித்த அனைவரும் குழந்தை நட்சத்திரங்கள் என்பதால் அவர்களை வைத்து காட்சிகளை படமாக்க மிகவும் சிரமமப்பட்டோம். இந்த படத்தின் கதையை தேனிசை தென்றல் தேவாவிடம் சொன்னபோது குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம் அதனால் நான் இசையைக்கிறேன் என்றார் அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்களை பிரம்மாதமாக தந்திருக்கிறார். தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது

இவ்வாறு இயக்குனர் சுரேஷ் கே.வெங்கிடி. கூறினார்.

 

Related posts

சைரன் (பட விமர்சனம்)

Jai Chandran

சாதுவான சட்டகல்லுரி மாணவனின் வாழ்க்கை போராட்டம்

Jai Chandran

நயன்தாரா படத்தில் எதிர்பாராத கிளைமாக்ஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend