Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மனிதனும் நாயும் பாசப்பிணைப்பு இசை ஆல்பம்..

பில் ப்பெட் லவர்ஸ் (Pet Lovers) க்கான இசை கொண்டாட்டமாக ஃபலோ ஃப்லோ மீ (Follow Follow Me) என்கிற ஆங்கில இசை ஆல்பம் வெளி வர உள்ளது. வீடுகளில் , அப்பார்ட்மென்டுகளில் நாய்கள் வளர்க்க பல கட்டு பாடுகள் உள்ள இக்காலகட்டத் தில் Pet lovers அதிகமாகி வருகின்றனர் . நாய்கள் வீட்டின் ஓர் அங்கமாகிவிட்ட சூழ்நிலையில் மனிதனுக்கும் , நாய்களுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வெளிப் படுத்தும் விதத்தில் கொண் டாட்டமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது .

சென்னையில் டாக் தீம்டு ரெஸ்டாரண்ட் (Dog Themed Restaurant) ஆன டிவிஸ்டி டெயில்ஸின் உரிமையாளர் ரேகா டேண்டே மற்றும் பதினாறு பப்பிகளுடன் இணைந்து இந்த இசை ஆல்பத்தில் சாகசம் செய்துள்ளனர். நாய் பிரியர்களுக்கான கொண் டாட்ட மனநிலையையும், உணர்வுப்பூர்வமான பந்தத்தையும், தினசரி அவர்கள் கண்டுக்கொள்ளும் சேஷ்டைகளையும் வெளிப் படுத்துகிறது இந்த Pup Pop Music video!
சனித்தா ரவீந்திரன் பாடல் எழுத , இந்த ஆல்பத்தை இசை அமைத்து, இயக்கியி ருக்கிறார் யதீஷ் மகாதேவா. இவர் தமிழ் , மலையாள மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையை மைத்து உள்ளார் .

தமிழில் வெளியான சொன்னா புரியாது , 90ml போன்ற படங்களுக்கு கிரியேடிவ் புரோடிசர் ஆக பனியாற்றி உள்ளார் . இப்பாடல் ஆங்கிலத்தை தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் வெளிவர உள்ளது.

 

Related posts

பாபா பட புது காட்சிகளுக்கு டப்பிங் பேசிய ரஜினி

Jai Chandran

ஏலே படத்தை திரையிட மறுப்பதா? பாரதிராஜா அறிக்கை..

Jai Chandran

ஆதார் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend