Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தீபாவளி போனஸ் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

தளபதி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி சர்பிரைஸ் கொடுக்கப் போகும் ’தீபாவளி போனஸ்’ திரைப்படம்

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனா கவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியா கிறது.

தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர் களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்த்ரிகையாளர் கள் படம் மிக எதார்த்தமாகவும், மக்களின் வாழ்வியலாகவும் இருப்பதாக பாராட்டியதோடு, படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கான தீபாவளி கொண்டாட்டமாகவும் இருக்கும், என்றும் பாராட்டியுள் ளனர். மேலும், படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் பேசுகையில், “என் நண்பர் மந்த்ரா வீரபாண்டிய னுக்கு முதல் நன்றி, அவர் இல்லனா இந்த படம் எனக்கு கிடைத்திருக்காது. என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எங்களை நம்பி இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை படங்கள் பார்க்கிறீர்கள், எத்தனை பேரை பார்க்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும், அதனால் இந்த படத்தை பற்றி நாங்கள் சொல்வதை விட, படம் பார்த்த நீங்கள் தான் சொல்ல வேண்டும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் பார்த்திவ் முருகன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். முதலில் என் இயக்குநர் சாருக்கு நன்றி, என் தயாரிப்பாளர் சாருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் மரிய ஜெரால்ட் பேசுகையில், “நாங்கள் இளைஞர்கள் குழு. நான் பல வருடங்களாக இசையமைப்பாள ராக வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நானும், இயக்குநர் ஜெயபாலும் 15 வருட நண்பர்கள், நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் தான் ஜெயபால் கல்லூரியில் படிக்கிறார் என்பதே எனக்கு தெரியும். அவர் கல்லூரிக்கே வர மாட்டார், விளையாட்டில் தான் அதிகம் ஈடுபடுவார். அப்போது என்னுடைய நண்பர் மூலமாக ஒருவர் இருக்கிறார், அவர் பாடல்கள் எழுதுவார் என்று கூறி தான் என்னை ஜெயபாலனிடம் அறிமுகம் செய்து வைத்தனர், அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்று வரை பயணிக்கிறது. படத்தின் தயாரிப்பாளரை நான் இன்று தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு அவர் இயக்குநர் ஜெயபாலன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை மூலம் இத்தனை இளைஞர்களுக்கு அவர் வாய்ப்பளித்திருக்கிறார், அவருக்கு நன்றி. எங்கள் குழுவினர் அனைவரும் தற்செய லாக இணைந்தவர்கள் தான். படத்தொகுப்பாளர், ஒளிப்பதி வாளர் என அனைவரும் அப்படி தான் சேர்ந்து ஒரு குழுவாக பணியாற்றினோம். நான் முழுக்க முழுக்க டவினில் வளர்ந்தவன், ஜெயபால் கிராமத்தில் வாழ்ந்தவர். அதனால், இந்த படத்தின் பாடல்கள் உள்ளே வருவதற்கு கொஞ்சம் காலம் ஆனது. பிறகு ஜெயபால் தான் எனக்கு தைரியம் கொடுத்தார், உன்னால் பண்ண முடியும் என்ற நம்பிக்கை அளித்து என்னை பணியாற்ற வைத்தார். முதல் பாடலுக்கு தான் நேரம் ஆனது, பிறகு அனைத்து பாடல்களையும் விரைவாக முடித்து விட்டோம். படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாக பாடல்களை முடித்துவிட்டேன். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டது, படமும் வெளியீட் டுக்கு தயாராகி விட்டது. எங்களின் பல வருடன் கனவு உங்கள் முன்பு இருக்கிறது. நீங்கள் தான் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்து வெற்றி பெற செய்ய வேண்டும், நன்றி.” என்றார்.

நடன இயக்குநர் நிசார் கான் பேசுகையில், “முதலில் என் தாய், தந்தைக்கு நன்றி. ஜெயபால் அண்ணனை எனக்கு முதலிலேயே தெரியும். அவருடன் சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன். இந்த படத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, உழைப்பு அனைத்தும் மிகப்பெரியது. இந்த படத்திற்காக நடனக் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், மாண்டேஜ் போல் தான் பணியாற்றியிருக்கிறோம். எங்களை அணைத்து பணி களிலும் அவர் ஈடுபடுத்துவார். அவர் போல் தயாரிப்பாளரும் எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார். ஜெயபாலன் அண்ணன் மீது இருக்கும் ஒரு பற்று போல் தயாரிப்பாளர் மீதும் எங்களுக்கு இருக்கிறது, அதற்காக அவருக்கு நன்றி. இந்த படம் இப்போது உங்களிடம் இருக்கிறது, அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது போல் எங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி” என்றார்.

விக்ராந்தின் மகனாக நடித்தி ருக்கும் சிறுவன் ஹரிஷ் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஜெயபாலன் சாருக்கு நன்றி. இந்த படத்திற்காக ஆடிசன் நடந்த போது என் தந்தை மதுரைக்கு அழைத்துச் சென்றார். ஆடிசனில் கலந்துக்கொண்ட பிறகு நான் தேர்வானேன். அதன் பிறகு ஒருவாரம் அவர்களே எனக்கு நடிப்பதற்கு பயிற்சி அளித்தார்கள், மதுரை ஸ்லாங் பேச சொல்லிக் கொடுத்தார்கள். அதை நன்றாக கற்றுக்கொண்டு நன்றாக நடித்தேன், நன்றி.” என்றார்.

படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ் பேசுகையில், “தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சிறு முதலீட்டு படங்களை வெளியிடும் நிறுவனம் என்றும், குறைந்த திரையரங்கம் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நிறுவனம் என்று தான் இதுவரை இருந்தது. ஊடகங்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் ஆதரவால், ‘தீபாவளி போனஸ்’ படம் மூலம் நல்ல கமர்ஷியல் படம் மற்றும் வணிக ரீதியாக பெரிய வருமாணம் ஈட்டக்கூடிய படத்தை கையாளும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எங்களிடம் வருவதற்கு ஒரு நீண்ட பயணம் தேவைப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு இந்த படம் வர வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் இயக்குநர் தவம் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு படத்தை வெளியிடும் போதும், இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து கனமான பதிவு வரும். நம்ம படம் எப்போது வரும், என்று உருக்கமாக கேட்பார். அதில் இருந்தே அவருடைய ஏக்க, தவிப்பு தெரியும். அதேபோல், இந்த படத்தின் தயாரிப்பாளர் இதுவரை எந்த விசயத்திலும் தலையிடவில்லை. கதையை கேட்டு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட் டார். அவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்றி யிருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு அனைவரும் உண்மையாக உழைத்து இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருக் கிறார்கள். இதில் பெருமையான விசயம் என்னவென்றால், இதுபோன்ற பணிகளை செய்ய தமிழ் சினிமாவில் ஐம்பது பேர் இருப்பார்கள், அவர்களைப் பற்றி விசாரித்து நான் தான் வேண்டும் என்று கேட்டு, ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் மூலம் தான் படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் தான் நாங்களும் இந்த அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கி. றோம். 100 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் ஆடியோ உரிமையை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுத்திருக்கிறோம். அதேபோல் வெளிநாட்டு திரையிடலும் இன்று உறுதியாகியுள்ளது. அதை இப்போது தான் இயக்குநரிடம் தெரிவிக்கிறேன். அதேபோல், இரண்டு முன்னணி ஒடிடி தளங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதுவும் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். தீபாவளிக்கு ஒருவாரம் முன்பு வெளியாகும் போது சிலர் சில கருத்துக்களை சொன்னார்கள். குறிப்பாக தீபாவளியன்று வெளியிடலாமே, என்றார்கள். அதற்கு நாங்கள் ரெடி தான், ஆனால் தற்போதைய சூழல் என்னவென்று உங்களுக்கே தெரியும். தீபாவளிக்கு முன்பு வெளியிடுவது, தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஒரு சூழலாக இருக்கிறது, எனவே இது தீபாவளிக்கான சரியான படமாக இருக்கும். படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும் படத்தை பாராட்டியுள்ளனர். எனவே, இந்த தீபாவளி போனஸ் எங்களுக்கு போனஸாகவே இருக்கும்.” என்றார்.

தயாரிப்பாளர் தீபக் குமார் தாலா பேசுகையில், “நான் படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது எப்படி வந்தது என்றால், நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சென்னையில் துணை நடிகர் களுடன் புத்தாண்டு கொண்டாடினேன். அப்போது அவர்களின் கஷ்ட்டத்தை நான் பார்த்தேன். சினிமாவில் இவ்வளவு கஷ்ட்டங்கள் இருக்கிறதா, இவ்வளவு பேர் இதில் ஜெயிக்க போராடுகிறார்களா, என்று யோசித்தேன். அதனால் தான் நாம் ஒரு படம் எடுத்து கஷ்ட்டப்படு கிறவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க்லாம் என்று நினைத் தேன். அப்போது தான் என் நண்பர் மூலம் ஜெயபாலனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவரிடம் பல நிபந்தனைகள் வைத்தேன். படம் குடும்பமாக பார்க்க கூடிய படமாக இருக்க வேண்டும், இயல்பாக இருக்க வேண்டும், பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும், என்று சொன்னேன். அவரும் அதை கேட்டு ஒரு கதை சொன்னார், எனக்கு பிடித்திருந்தது உடனே படத்தை தொடங்கி விட்டேன். அதுமட்டும் இன்றி புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஜெயபாலனிடம் கேட்டுக்கொண் டேன். அவரும் அவரைப் போல் வாய்ப்பு தேடுபவர்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்திருக்கிறார். இப்போது படம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். படமும் சிறப்பாக இருக்கிறது, பாடல்கள் நன்றாக இருக்கிறது. எனவே இந்த படம் வெற்றி பெற வேண்டும், அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். இது எனக்காக கேட்கவில்லை, இதில் பணியாற்றியவர்களுக்காக தான் கேட்கிறேன். நன்றி.” என்றார்.

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி போனஸ் படத்தில் என்ன சர்ப்ரைஸ் என்று கேட்டால் ஒரு விஷயம் இருக்கிறது. படத்தில் விஜய் நடித்த ஒரு படத்தின் சீன் இடம் பெறுகிறது. என்ன என்பதை படத்தில் பாருங்கள்.

Related posts

“டூரிஸ்ட் பேமலி” வெற்றியால் சம்பளம் அதிகரிப்பா: சசிகுமார் பேச்சு

Jai Chandran

Mike Tyson, Liger Vijay Deverakonda Met Face To Face

Jai Chandran

மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend