Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தெய்வ மச்சான் (பட விமர்சனம்)

Lபடம்: தெய்வ மச்சான்

நடிப்பு: விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், வேல ராம மூர்த்தி, வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி

தயாரிப்பு: உதயகுமார், கீதா உதயகுமார், எம் பி.வீரமணி

இசை: அஜீஸ்

ஒளிப்பதிவு: கேமல் ஜே அலெக்ஸ்

இயக்கம்: மார்டின் நிர்மல்குமார்

பி ஆர் ஒ: யுவராஜ்

தபால் கார்த்தி (விமல்)  என்றால் ஊருக்கே அத்துப்படி. தங்கை அனிதாவுக்கு திருமணம் செய்து வைக்க சாரை சாரையாக மாப்பிள் ளைகள் வந்தும் எதுவும் அமைய வில்லை. ஜமீன்தார் மாப்பிள்ளை ஒன்றும் வருகிறது. ஆனால் மாப்பிள்ளைக்கு பெண்ணின் தாத்தா வயது என்பதால் அவர் களை கார்த்தி விரட்டியடிக்கிறார். அவர்கள் கோபமாக செல்கின் றனர். இந்நிலையில் வேறுமாப் பிள்ளை பார்த்து தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறான் கார்த்தி. ஆனால் அவனது கனவில் வரும் சாட்டைக் காரன், தங்கைக்கு திருமணம் நடந்தால் மாப்பிள்ளை மச்சான் 2 நாளில் இறந்து விடுவான் என்று சொல்ல அதைக்கேட்டு கார்த்தி அதிர்ச்சி அடைகிறான். உடனடி யாக திருமணத்தை நிறுத்த எண்ணுகிறான் ஆனால் திருமணம். நடக்கிறது. வேட்டைக் காரன் சொன்னபடி மாப்பிள்ளை மச்சான் இறந்தானா என்பதற்கு படம் கலகலப்பாக பதில் கூறுகிறது.

வெயில் டென்ஷனில் ஆக்ரோஷ மான படத்தை பார்த்து மேலும் உஷ்ணம் அடையமலிருக்க வேண்டுமென்றால் தெய்வ மச்சான் போன்ற கலகலப்பான படத்தை பார்த்து மனதை குளிர்ச்சி அடையலாம்.

படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்காமல் காட்சிகளை ரசித்தால் விமலின் சேட்டைகளும் ஜாமீன் தரப்பு சேட்டைகளும் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.

ஜாமீன்தார் மாப்பிள்ளை போட்டோப்ல்வை பார்த்து தங்கையை பெண் பார்க்க அனுமதி கொடுக்கும் விமல், ஜாமீன் குடும்பம் எல்லாம் வந்த பிறகும் மாப்பிள்ளையை காணோமே என்று புலம்புவதும் பின்னர் தான் தான் மாப்பிள்ளை என்று வழுக்கை மண்டை வயதான ஜமீன்தார் கூறியதும் அடுத்த கணம் அந்த இடமே ரணகளமாவது சிரிப்பு வெடியை சிதறவிடுகிறது.

விமல் கனவில் சாட்டைகாரன் வந்து சொன்ன, “மாப்பிள்ளை மச்சான் இரண்டு வாரத்துக்குள் இறந்து விடுவான்*  என்ற ஒரு பாயின்ட்டை வைத்துக் கொண்டு முழு படத்தையும் உருட்டி ஓட்டியி ருக்கிறார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார்.

விமலுடன் சேர்ந்து பாண்டிய ராஜன், தீபா வெங்கட், பாலா சரவணன், ஏன் ? ஆடுகளம் நரேன் கூட காமெடி செய்து ஸ்கோர் செய்கின்றனர். அதுவும் மாப்பிள் ளைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக பஸ்சை ஆமை வேகத்தில் விமல் ஓட்ட வைப்பது “கிரேசி மோகன்” ஸ்டைல் காமெடி.

ஹீரோயின் யாரென்றே தெரிய வில்லை. அந்தளவுக்கு அவரது பாத்திர டம்மியாக உள்ளது. பாண்டியராஜனுக்கும் அதுதான் கதி. தீபா வெங்கட்டை யாராலும் கட்டுபடுத்த முடியாதள வுக்கு காமெடி என்ற பெயரில் சத்தமாக பேசி காதை டமாரமாக்குகிறார்.

உதயகுமார், கீதா உதயகுமார், எம் பி.வீரமணி தயாரித் திருக்கின்றனர்.

அஜீஸ் இசை,, கேமல் ஜே அலெக்ஸ் ஒளிப்பதிவு நாrmal

மார்டின் நிர்மல்குமார் மார்டன் பெயராக இருந்தாலும் பழைய சென்டிமென்ட் வைத்து செய்தி ருக்கும் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

தெய்வ மச்சான் – காமெடி மச்சான்.

Related posts

ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 வெளியாகிறது

Jai Chandran

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’

Jai Chandran

விஜய் நடிக்கும் 65வது படம் தொடக்கம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend