Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஃபெர்ஹானா (பட விமர்சனம்)

படம்: ஃபெர்ஹானா

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வ ராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், கிட்டி

தயாரிப்பு: எஸ் ஆர் பிரபு, பிரகாஷ் பாபு

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு: கோகுல் பென்னி

இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்

பி ஆர் ஓ: ஜான்சன்

ஏழை குடும்பத்தை சேர்ந்த ஃபெர்ஹானா  (ஐஸ்வர்யா ராஜேஷ்)  வருமானத்துக்காக   கால் சென்டர் பணியில் சேர் கிறார்.. கூடுதல் வருமானத்துக் காக சாட் கேர்ள் வேலைக்கு மாறுகிறார். மறுமுனையில் ஆபாசமாக பேசுபவர்களின் பேச்சை கேட்க சகிக்காமல் அந்த வேலையிலிருந்து விலக முடிவு செய்கிறாள். திடீரென்று வரும் ஒரு அழைப்பில் பேசுபவர்  அன்பாக வும் நட்போடும் பேசுகிறார். அவரிடம் ஃபெர்ஹானா மனம் விட்டு பேசி மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபரை சந்திக்க எண்ணுகிறார்.. இந்நிலையில்  தனது  தோழி கொல்லாப்பட்டதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஃபெர் ஹானா. பயத்தில் போன் நண்பரை சந்திக்கும் திட்டத்தை கைவிடுகிறார் ஆனால் நிலைமை விபரீதமாகிறது. போன் நண்பர் ஃபெர்ஹானாவை மிரட்டுகிறார். விஷயம் வீட்டுக்கு தெரிந்துவிடும் என்று ஃபெர்ஹானா பயந்து நடுங்குகிறார். ஒரு கட்டத்தில் வீட்டுக்கே மர்ம நபர் தேடிவர அடுத்து நடப்பதெல்லாம் கிரைம் த்ரில்லராக மாறுகிறது.

மதரீதியான தாக்குதல் உள்ளடக் கிய கதை என்று சிலரால் கிளப்பி விடப்பட்டது வீண் வதந்தி என்பதை படம் உணர்த்துகிறது.

ஃபெர்ஹானா பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாழும் ஏழ்மையான முஸ்லிம் குடும்பமாகவே ஐஸ்வர்யா, கிட்டி, ரமேஷ் குடும்பம் மாறியிருப்பது தான் கதையின் உயிர்நாடி.

கால் சென்டர் வேலைக்கு செல்லும் ஐஸ்வர்யா கூடுதல் சம்பாத்தியத் துக்காக ஆண்களுடன் சாட் செய்யும் பிரிவுக்கு மாற மறுமுனையில் இருந்து வரும் குரல்கள் ஆபாசமாக பேசுவதை கேட்டு குமுறுவதும் ஒரு கட்டத்தில் மறுமுனை குரல் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குவதை கேட்டு அந்த நபரிடம் ஐஸ்வர்யா மனதை பறிகொடுப்பதும் மாறுபட்ட காதல் உணர்வு. ஆனால் அதுவே பின்னால் கொடூர வில்லத்தன மாகும் என்பதை யூகிக்க முடியவில் லை
மானசீகமாக சென்று கொண்டி ருந்த ஐஸ்வர்யாவின்   உரையாடல் திடீரென்று  டிராக் மாறுவது படத்தை அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
மர்மநபர் யார் என்பது கடைசி காட்சி வரை சஸ்பென்சாக செல்வது விறுவிறு. அதை இங்கும் சொல்லாமலிருந்தால் படம் பார்க்கும்போது சஸ்பென்ஸ் ஆர்வம் குறையாமலிருக்கும்..

குடும்ப தலைவராக வரும கிட்டி அசல் பாயாகவே மாறியிருக் கிறார். ஜித்தன் ரமேஷ் வேடத்தில் நடிப்பதற்கு ரொம்பவும் பொறுமை அவசியம். அந்த பொறுமையின் உருவாகவே ரமேஷ் மாறியிருக்  கிறார்.

இயக்குனர் செல்வ ராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி அட போட வைக்கிறார்.

டிரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு, பிரகாஷ் பாபு தயாரித்திருக்கின் றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசை படத்தின் கதைக்கு நிகராக பயணிக்கிறது.

கோகுல் பென்னி ஐஸ்ஹவுஸ் சந்து பொந்துகளில் சுழன்றி ருக்கிறது.

கதையை நேர்த்தியாக நெல்சன் வெங்கடேசன் கையாண்டிருப்பது கத்தி மீது காயம் படாமல் நடந்திருப்பதற்கு சமம். ஆனால் கதைக்களத்தை முஸ்லிம் குடும்பக் கதையாக்கியதுதான் ஏனென்று புரியவில்லை.

ஃபெர்ஹானா – மானசீக காதலின் கொடூர முகம்.

Related posts

Sasikumar starrer KAARI to hit screenon November 25th

Jai Chandran

பெரிய பட வாய்ப்பால், புதுபட புரமோஷனுக்கு நடிகை வர மறுப்பு

Jai Chandran

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend