Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

ஜாலியோ ஜிம்கானா (பட விமர்சனம்)

படம்: ஜாலியோ ஜிம்கானா

நடிப்பு: பிரபுதேவா, மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜான் விஜய்

தயாரிப்பு: ராஜன் அண்ட் நீலா

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

இயக்கம்: சக்தி சிதம்பரம்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா

 

காமெடி அதில் லாஜிக் பார்க்க கூடாது என்று முதலிலேயே  சொல்லிவிட்டு படத்தை தொடங்குகிறார்கள். எதற்காக இப்படி சொன்னார்கள் என்பது படம் பார்க்கும்போது சீனுக்கு சீன் புரிகிறது.

பிரபுதேவா ஒரு வழக்கறிஞர். அவரிடம் தங்கள் மீது ரவுடிகள் நடத்தும் தாக்குதல், அவர்கள் செய்த பணமோசடி பற்றி சொல்வதற்காக அபிராமி, மடோனா செல்கின்றனர். ஆனால் ஓட்டல் அறையில் பிரபுதேவா டெட்பாடி ஆக  கிடக்கிறார். அந்த டெட்பாடியை. வைத்துக்கொண்டு 10 கோடி சம்பாதிக்க அபிராமி,  மடோனா கோஷ்டி திட்டமிடுகிறது.  இதற்கிடையில் போலீஸ், அரசியல்வாதிகள், ரவுடிகள் என ஒரு கூட்டமே அவர்களை துரத்துகிறது. இதன் முடிவு என்ன என்பதை கலகலப்பாக சொல்கிறது கிளைமாக்ஸ்.

பிரபுதேவா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் வந்திருக்கிறது அதுவும்   லாஜிக் எதுவும் இல்லாமல்…

டெட் பாடியாக பிரபுதேவா நடித்திருக்கிறார்.. டெட்பாடி எப்படிடா நடிக்கும்ன்னு கேட்டா.. அது அப்படித்தான். ஏற்கனவே கமலின் மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் டெட்பாடியயாக நடித்திருப்பார். அந்த இன்ஸ்பிரேஷன்தான் இந்தக் கதை.

டெட்பாடியாக இருக்கும் பிரபுதேவாவை தாங்கிப் பிடித்துக் கொண்டு அபிராமி, மடோனா  கோஷ்டி  கொடைக்கானல் வரை காரிலும், பஸ்ஸிலும் பயணிப்பது  பொறுத்துக் கொண்டும்.. முடிந்தால் சிரித்துக் கொண்டும் பார்க்க வேண்டிய காட்சிகள்…

டெட்பாடி மீது சிறிது நேரத்திலேயே நாற்றம் வர தொடங்கிவிடும் ஆனால் இவர்கள் ஒரு டெட் பாடியை நாள் முழுக்க சுமந்து கொண்டு சுற்றுகிறார்கள். வங்கிக்கு அழைத்து சென்று பேசுவது போல் நடிக்க வைக்கிறார்கள், அதையும் நம்பி  ஒரு கேன மேனேஜர்  10 கோடி ரூபாய் பணத்தை தர சமாதிக்கிறார்.. யாருமே அவரை டெட்பாடி என்று கண்டுபிடிக்க மாட்டார்களாம். என்னதான் லாஜிக் இல்லை என்றாலும் காதில் பூ சுற்றலாம் ஒரு ஆளுயர  மாலையே சுற்றி இருக்கிறார்கள்.

பிரபுதேவா என்றால் நடனம் எதிர்பார்ப்பார்கள். இரண்டு நடனம் ஆடி அசைத்தியிருக்கிறார் அத்துடன் டெட்பாடியாக இருந்தபடி ஒரு சண்டையும்.போடுகிறார். எப்படி? எப்படியென்றால் அத்தான் லாஜிக் கிடையாதே அப்படித்தான்..

மடோனா, அபிராமி,   ஜான் விஜய், எம், எஸ், பாஸ்கர் என எல்லோருமே காமெடியன்களாக மாறி இருக்கிறார்கள்.

ராஜன் அண்ட் நீலா  படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

சக்தி சிதம்பரம் இயக்கி இருக்கிறார். எப்படியாவது சிரிக்க வைத்து விட வேண்டும் என்று போராடி இருக்கிறார.  ஒரு சில இடங்களில் அதற்கு பலன்  கிடைத்திருக்கிறது.

அஸ்வின் இசையில் பாடல்கள் ஜாலியோ ஜிம்கானாதான். காட்சிகளை கலர்புல்லாக்கி இருக்கிறார் கேமரா மேன் கணேஷ் சந்திரா.

ஜாலியோ ஜிம்கானா – கமர்சியல்

 

Two And A Half Star Rating Illustration Vector

Related posts

திபு நினன் தாமஸின் மறக்க முடியாத காதல் பாடல்கள்..

Jai Chandran

TV sensational stars Arnav-Divya enter wedlock

Jai Chandran

அப்பாவை ஏமாற்றி.படம் தயாரித்த இயக்குனர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend