Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி டிஸ்சார்ஜ்: ஒரு வாரம் ஓய்வு. ரிஸ்க்கான பணிகள் தவிர்க்க வேண்டும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற் காக ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண் டார். படப் பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு நேற்று முன் தினம் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயர் ரத்த அழுத்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரஜினிக்கு இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அவர் மருத்துவ பரிசோதனையில் வைத்து கண்காணிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. அவரது ரத்த அழுத்தம் சீரானது. உடல்நிலையில் முன்னேற்றம், ஏற்பட்டது. அவரது உடல் நிலை நல்ல நிலைக்கு வந்ததையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
அவரது வயது, உயர் ரத்த அழுத்தம், மாற்று அறுவை சிகிச்சை நிலையை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.
1) ஒரு வார காலத்துக்கு முழு ஒய்வில் ரஜினிகாந்த் இருக்க வேண்டும் அவரது ரத்த அழுத்தம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.
2)உடல் ரீதியான செயல்பாடு கள் குறைத்துக்கொண்டு, அழுத்தங்களை தவிர்க்க வேண்டும். இந்த பரிந்துரை கள் கருத்தில் கொண்டு கோவிட் 19 காலத்தில் அவர் ரிஸ்க் கான பணிகளை தவிர்க்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

 

Related posts

தலைமை செயலகம் (வெப் சீரிஸ் விமர்சனம்)

Jai Chandran

Director Bharathiraja launches Kabilan Vairamuthu’s Aagol

Jai Chandran

Actor Singam Puli reveals How part of Mufasa: The Lion King

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend