Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை: பன்னீர் செல்வம் பேட்டி

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதத்தமாக மூடப்பட்டிருந்தது. சென்ற  நவம்பர் மாதம் தியேட் டர்கள் திறக்கப்பட்டன. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு திரை அரங்கு சங்கம் சினிமா தியேட்டர் களில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல் எடப்படி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர்.

இது பற்றி  தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அவர்  தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தது. நாங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம். தியேட்டர் இயங்காத போதும்  குறைந்த பட்சம் மின் கட்டணம் கட்டப்பட்டது. 50 சதவீத பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு சம்பளம் தரப்பட்டிருக்கிறது. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

தியேட்டர்களால் கொரோனா பரவியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விமானங்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கப்படுகி றது. எனவே தியேட்டர்களி லும் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கி றோம்.

விஜய் நடித்துள்ள  மாஸ்டர் படத் தை வரும் பொங்கலுக்கு  தியேட்டர்களில் வெளி யிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக விஜய்க் கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கி றோம்.  ஈஸ்வரன் படம் வெளியிட்ம் சிம்புவுக்கும் நன்றி.

கடந்த  8 மாதத்தில் மொத்தமாக தியேட்டர்காரர்களுக்கு ரூ 2500 கோடி நஷ்டம் ஏற்பட்டி ருக்கிறது.  போதுமான வருமானம் இல்லாதததால் 400 தியேட்டர் கள் மூடப்பட்டிருக்கின்றன. மாஸ்டர் படம் வரும்போது எல்லா தியேட்டர்களும் திறக்க ஏற்பாடு செய்வோம். மாஸ்டர் படத்துக்கு ரிசர்வேஷன் தொடங்கிவிட்டதா என்கிறார்கள். இன்னும் பட ரிலீஸ் அறிவிப்பு வரவில்லை வந்த பிறகுதான் ரிசர்வேஷன் தொடங்கும்.
ஒடிடி தளங்களால் தியேட்டர் களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல படங்கள் ஒடிடியில் வெளியிடப்பட் டுள்ளது. இது சவாலாக உள்ளது. ஒடிடியில் படங்களை வெளியிடும் ஒரு குடும்பம் தியேட்டர்களை மூடிக்காட்டு வதாக சவால் விட்டிருக்கி றார்கள். அவர்கள் எல்லா படங்களையும் ஒடிடி தளத்திலேயே ரிலீஸ் செய்துக் கொள்ளட்டும்  நாங்கள் அவர்கள் படங்களை திரை யிட விரும்பவில்லை.

சமீபத்தில் கூட காட்டேரி படத்தை தள்ளிவைத்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொரோனா 2வது அலை பரவுவதாக வதந்தி பரப்பி ஒரு அறிக்கை வெளியிட்டார். இது தியேட்டருக்கு வரும் ரசிகர் களை பயமுறுத்தும் செயல். ஜெயம் ரவியும் தனது படத் தை ஒடிடியில் வெளியிட்டிருக்கிறார். அவர் எங்களிடம் வரும்போது நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
இவ்வாறு ஆர்.பன்னீர் செல்வம் கூறினார்,
பேட்டியின்போது தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்,

Related posts

டைரக்டர் அகத்தியன் மகள் நிரஞ்சனி திரைப்பட இயக்குனரை மணக்கிறார்

Jai Chandran

முதலமைச்சராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து

Jai Chandran

நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend