Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரச்னைக்கு சண்டை தீர்வாகாது: ’கம்பெனி’ பட விழாவில் பாரதிராஜா பேச்சு

ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன், “ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘கம்பெனி’ திரைப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தை முடிப்பதற்குள் நான் பல போராட்டங்களையும், பிரச்சனை களையும் எதிர்கொண்டேன். படம் தொடங்கிய உடன் கொரோனா பிரச்சனை வந்தது. அது முடிந்த பிறகு இந்த படத்தில் நடித்த என் மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதனால் சுமார் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவருக்கு உடல்நிலை சரியானதும் மீண்டும் கொரோனா பிரச்சனை, இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து தான் இந்த படத்தை முடித்தேன். நான் இளம் வயதில் நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். இதே வடபழனி பகுதியில் உணவின்றி சுற்றி  திரிந்திருக்கிறேன், ஒரு நாள் பசியால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அப்படி பல கஷ்ட்டங்களை சந்தித்தாலும், வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியத்தோடு இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். ஏதோ பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல், நான் பிறந்தேன், சாதித்தேன் என்று காட்ட வேண்டும், என்ற லட்சியத்தோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். படத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்த வந்த அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன், நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், “கம்பெனி பட அழைப்பிழை பார்த்த போதே தயாரிப்பாளரின் தனித்துவம் தெரிந்தது. மேடையில் பேசும் போதும் உள்ளத்தில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னார். அதுவே அவர் உயரிய நிலைக்கு வருவதற்கு சான்று. பெயரே கம்பெனி. அனைவரும் சேர்ந்து உருவாக்க கூடிய இந்த கம்பெனி நான்கு பேரை வைத்து விளம்பரம் செய்திருக்கிறீர்கள். நான்கு வேதங்கள், நான்கு திசைகளாக, எட்டுதிக்கும் கொடிகட்டி பறக்கும். அதுமட்டும் இல்லாமல், பாடல் வரிகள், “அடடா…அடடா…ஆனந்தம் அதுவே பேரின்பம்…” என்றார்கள் அதற்கு மேல் என்ன வேண்டும், எனவே ஆனந்தமும், பேரின்பமும் சேர்ந்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று இறைவனை வேண்டி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.” என்றார்.

சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் பேசுகையில், “இந்த படத்தை நான் வாழ்த்துவதை விட, எனக்கு இவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். நான் மீடீயாவில் வருவதற்கு காரணமே பாரதிராஜா சார் தான். அவருடைய மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு படம் வெளியாகி விட்டது. இன்னும் இரண்டு படங்கள் வெளியாக வேண்டும். நானும் ஒரு படம் எடுத்திருக்கிறேன், அதன் சிரமம் எனக்கு தெரியும். படப்பிடிப்பின் போது பல பிரச்சனைகள் வரும், அதை எல்லாம் சமாளித்து படத்தை சிறப்பாக முடித்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் கஷ்ட்டப்பட்டதை இங்கு சொன்னார். அவரைப்போல் நானும் கஷ்ட்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.  எல்லோரும் கஷ்ட்டப்பட்டு தான் வந்திருப்போம். இந்த கஷ்ட்டங்கள் எல்லாம் நமக்கு பெரிய வெற்றியாகும். இந்த படத்தோட வெற்றி விழாவில் நாம் மீண்டும் சந்திப்போம்.” என்றார்.

நாக் ஸ்டுடியோ கல்யாணம் பேசுகையில், “இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள். இந்த படத்தோட இயக்குநர் கொரோனா பிரச்சனையில் சிக்கினாலும், அதில் இருந்து மீண்டு படத்தை முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் என்னிடம் வரும்போதெல்லாம் முகத்தை தொங்க போட்டுக்கொண்டே வருவார். அப்போது நான், என்னடா இவரு இப்படி வருகிறாரே, படத்தை முடிப்பாரா, என்று நினைத்தேன். ஆனால், படம் முடியும் போது, எந்தவித முகசுழிப்பும் இல்லாமல், அனைத்து பணிகளையும் வேகமாக செய்து படத்தை முடித்துவிட்டார். இந்த படத்தில்  நான்கு பேர் நடித்திருக்கி றார்கள். அதில் சில புதியவர்கள், சிலர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அதுபோல் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் வளரும் கலைஞர்கள், தயாரிப்பாளர் புத்தம் புதுசு. புதிய கான்செப்ட் படம் என்பதால், இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “கம்பெனி படத்திற்கு சிறந்த இசையமைத்த இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், அற்புதமான எடிட்டிங் செய்திருக்கும் எடிட்டர் அனைவருக்கும் வாழ்த்துகள். நான் ஒரு பார்வையாளராக தான் இந்த டிரைலரையும், பாடல்களை யும் பார்த்தேன், மிக சிறப்பாக இருந்த தோடு, எந்தவித முக சுழிப்போம் இல்லாமல் பார்க்க முடிந்தது. அதுமட்டும் அல்ல, பாடல் காட்சியில் நாயகன், நாயகி முத்தக் கொடுப்பது போல் நெருங்கி வருகிறார்கள், ஆனால் கொடுக்க வில்லை. அப்படி தான் இருக்க வேண்டும்

படம் என்றால் என் தங்கை, தாய், பாட்டி, அக்கா என அனைவரும் பார்க்க வேண்டும். கலாச்சாரம் கெடாமல் படம் எடுக்க வேண்டும், அப்படி தான் கம்பெனி படம்  இவர்கள் எடுத்திருக்கிறார்கள், அதற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.

சினிமா நல்ல தொழில், ஆனால் யாரும் உதவி செய்வதில்லை. குறிப்பாக நடிகர்கள் எந்தவித உதவியும் செய்வதில்லை. டப்பிங் முன்பாக முழு சம்பளத்தையும் கேட்டு நிற்கிறார்கள், அப்போது என் தயாரிப்பாளர் என்ன செய்வார், எங்கு போவார். நீங்க சம்பாதித்து வீடு வாங்கிட்டு போகணும், என் தயாரிப்பாளர் வீட்டை வித்துட்டு ரோட்டுக்கு வரணுமா. ஒரு மளிகை கடை வைத்து நஷ்ட்டம் அடைந்தால் கூட, அதில் போட்ட தொகையில் 70 சதவீதம் திரும்ப வருகிறது. ஆனால், என் தயாரிப்பாளர் செய்யும் முதலீடுக்கு என்ன வருகிறது, முழுவதுமாக நஷ்ட்டம் தான் அடைகிறார்.

முருகேசன் கம்பெனி படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார், தங்கராஜ் சிறப்பாக இயக்கியுள்ளார். பாடல் சிறப்பாக உள்ளது. முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சியை பார்த்த போது படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. சரியான முறையில் விளம்பரம் செய்தால் கம்பெனி கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருந்தது. படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் கஷ்ட்டப்பட்டதை சொன்னார். நானும் கஷ்ட்டப்படு தான் இந்த இடத்திற்கு வந்தேன். இதில் நடித்திருக்கும் நான்கு பேரில் தயாரிப்பாளரின் மகனும் ஒருவர். தனது மகனை ஒரு ஹீரோவாக்கி பார்த்திருக்கும் தயாரிப்பாளர் முருகேசனை என்றும் மறக்க கூடாது, எப்போதும் பெற்ற தாயையும், தகப்பனையும் மதிப்பவர்கள் தோற்க மாட்டார்கள், கம்பெனி படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர் கராத்தே வெங்கடேஷ் பேசுகையில், “தமிழ் சினிமாவின் தூண்களாகவும், மூவேந்தர்களாகவும் இருக்கும் ஜாம்பவான்களுக்கு வணக்கம். இந்த படத்தில் எனக்கு சிறப்பா== ன வேடத்தை கொடுத்த இயக்குநர் தங்கராஜுக்கு நன்றி. பரியேறும் பெருமாள் வேடத்திற்கு இணையாக ஒரு வேடம் கொடுத்திருக்கிறார்கள். என் வேடத்தை பார்க்கும் போது உங்களுக்கு கோபம் வரும், என்ன கூடவே கொஞ்சம் அனுதாபமும் வரும். சிறப்பாக இசையமைத்த ஜுபின், சிறப்பாக ஓளிப்பதிவு செய்த செந்தில், சிறப்பான கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் தங்கராஜ், எனக்கு நண்பராக இருந்து பல உதவிகளை செய்த தயாரிப்பாளர் முருகேசன் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.” என்றார்.

0இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், “மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் என் பன்பான வணக்கங்கள். நான் ஒரு ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்தபடங்களில் இசை வெளியீட்டு விழா இதே பிரசாத் லேபில் தான் நடைபெற்றது. இந்த படத்தோட வாய்ப்பு எடிட்டர் சசிகுமார் மூலமாகத்தான் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகே நான் இசையமைக்க தொடங்கினேன். படத்தை பார்த்தவர்கள் இசையை வெகுவாக பாராட்டுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் படத்தில் செண்டிமெண்ட் அதிகம் இருக்கிறது. அதனால் தான் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் ஒரு பாடல் தான், இந்த பாடலை விவேகா சார் சிறப்பாக எழுதியிருக்கிறார். கதையுடன் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

 

Related posts

மதுரை கள்ளழகர் திருவிழா ரத்து

Jai Chandran

Revisiting the Twists and Turns of Suzhal-The Vortex -2

Jai Chandran

“Cinderella is a different horror fantasy film”: Actress Raai Laxmi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend