Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொரோனா பாதிப்பால் நடிகர் பாண்டு காலமானார்.. நடிகர் சங்கம் இரங்கல் !

 

பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிப்பின் மூலம ரசிகர்கள் கவர்ந்தவர் நடிகர் பாண்டு.-குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.  கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு (74) இன்று அதிகாலை காலமானர். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

” நடிகர் பாண்டு  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. கோவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு மரணமடைந்தார்.

கரையெல்லாம் செம்பக பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் புகழ் பெற்றார். சிரித்து வாழ வேண்டும், கடல் மீன்கள், பணக்காரன், நடிகன், நாளைய தீர்ப்பு, ராவணன், முத்து, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, காதல் கோட்டை, வாலி, கில்லி, சிங்கம், காஞ்சனா2 போன்ற பல ஹிட் படங்கள் உட்பட 230க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்துள்ளார்.

பாண்டு சிறந்த ஓவியராகவும் தன் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர் ஆவார். எழுத்துக்கள் வடிவமைக்கும் டிசைனராக கேபிட்டல் லெட்டர்ஸ் என்ற கம்பெனி மூலம் உலகம் முழுக்க அறிய பட்டவராக இருக்கிறார். இவர் டிசைன் செய்த AIADMK கொடியும் லோகோவும் தான் MGR அவர்கள் தேர்ந்தெடுத்தார். இவரது மனைவியும் ஓவியர் தான்.

இவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக நாங்களும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். நன்றி”.
#RIP !!

அனைத்து நடிகர் சமூகம் சார்பாக – தென்னிந்திய நடிகர் சங்கம்

Related posts

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி!

Jai Chandran

வீட்ல விசேஷம் (பட விமர்சனம்)

Jai Chandran

ஜி வி.பிரகாஷ் நடிக்கும் அரசியல் அதிரடி படம் ரிபெல்: பூஜையுடன் இன்று தொடக்கம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend