வெகுஜன மக்களின் இரசனை அறிந்து அவர்களை மகிழ்ச்சியில் மெய் மறக்கச் செய்திடும் மெயின் ஸ்ட்ரீம் சனிமாக்களை தயாரிப்பதிலும், அதனை வெளியிடுவதிலும்,
மலிவான விலையில் சிறப்பான மற்றும் தரமான திரை அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், அதி நவீன பாதுகாப்பு
அம்சங்களோடு பார்வையாளர்களுக்கு என்றென்றும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது AGS சினிமாஸ்.
பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு குடும்பதத்தினரோடு வந்து திரைப்படங்களை காண்பதில் உள்ள சிரமங்களை கண்டுணர்ந்து, டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம், மேலும் தின்பண்டங்களின் விலையில் 50% தள்ளுபடியையும் வழங்கி அவர்களின் சினிமா அனுபவத்தினை சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் அமையச்செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது AGS சினிமாஸ்…
ஒரு நல்ல திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும், அதனை சரியான தருணத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்பட்சத்தில். அந்த வகையில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருந்துகளை வென்று, வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும், AP Productions தயாரித்த ‘தேன்’ எனும் திரைப்படத்தினை ரூ.100/-சலுகை விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கி, இத்திரைப்படத்தினை பெருவாரியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பங்கு கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது AGS சினிமாஸ்…எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை, அழகியலோடு திரையில் கண்டு மகிழ்ந்திட … வாருங்கள் சினிமாவை கொண்டாடுவோம்…