அமிதாப்பச்சன், குடும்பமே கொரோனா பிடியில் சிக்கியது. மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அமிதாப், அபிஷேக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஐஸ்வர்யாராய், ஆராத்யாவுக்கு இன்று கொரோனா பரிசோதனை மீண்டும் நடத்தப்பட்டது. அதில் இருவருக்கும் வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானது.
பின்னர் ஐஸ்வர்யாராய் ஆராத்யா இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்கள்.
இதுபற்றி டிவிட்டரில் அபிஷேக்பச்சன் உறுதிப்படுத்தி உள்ளார், “உங்கள் பிரார்த் தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. என்றென்றும் உங்களுக்கு கடன்பட்டிருக்கி றேன். ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா கொரோனாவிலிருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இப்போது வீட்டில் இருக்கி றார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.