கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த 5 மாதமாக சினிமா ஷூட்டிங் ஸ்தம்பித்தது. படப்பிடிப்பு நடத்த மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி இன்று அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:
அவுட்டோர் ஷூட்டிங்கின்போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா கட்டுப்பாடுடன் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய விதிகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தி கொள் ளலாம்.
உடை, உபகரணங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
ஷூட்டிங் நடக்கும் தளங் களில் பார்வையாளர் களுக்கு அனுமதி கிடை யாது.
நடிகர், நடிகைகள் தவிர மற்ற அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
உபகரணங்களை பயன் படுத்துபவர்கள் தொழில் நுட்ப கலைஞர்களும் கட்டாயம் கையுறை அணிய வேண்டும்.
குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டும்.
படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமைச்சர் அறிவித்துள்ளார்.