Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2ம் பாகம்

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப் பட்ட படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என தடம் பதித்தார் சாருஹாசன். நடிப்பில் தன் தமயன் கமல்ஹாசன் உலகநாயகன் என பெயரிடப்பட்டிருக்கும் வேளையில் உலகிலேயே 87 வயதில் கதாநாயகனாக நடித்து வயதில் உலகநாயகன் எனப் பெயர் பெற்றார் சாருஹாசன்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் டீசர் வெளியான நேரத்தில் தாதா 87 பட டீசரும் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றதோடு உலகளவிலும் ட்ரெண்டானது. இப்படத்தினை பார்த்த பலரும் சாரு ஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக்கொண்டனர். இதனை மனதில் வைத்து பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாக வும் இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்குகிறார் விஜய் ஸ்ரீ ஜி.
உள்ளூரில் சாமான்யனாக தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடை கிறார் என்ற பின்னணியில் இப்படம் உருவாகிறது.
தற்போது 90 வயதிலும் உலக அளவில் நடிக்கிற நடிகர் என்ற பெருமை பெற்ற சாருஹாசன் நடிப்பில் உலகநாயகன் என்ற பெயர் பெற்ற கமல்ஹாசன் போல் வயதில் உலக நாயகன் என இடம்பெறுகிறார்.
முன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம் பெரும் நடிகர்,நடிகையினர் அனை வரும் ரசிக்கும் வண்ணம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தில் ஐஸ்வர்யா தத்தா,அனித்ரா நாயர், சாந்தினி,சாண்ட்ரியா, ஆராத்யா மற்றும் ஜூலியுடன் உருவாகும் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் லாக்டவுன் நேரத்திற்கு முன் தாதா 87- 2.0 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது.
சாருஹாசன், முக்கிய வேடத்தில் மைம் கோபி மற்றும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.
லாக்டவுன் தடைநீக்கத்திற்கு பின் அரசின் கட்டுப்பாட்டுகளோடு தேவையான படக்குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்கு பின் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் விஜய் ஸ்ரீ யுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப் பதிவை கோபி கவனிக்கிறார். விரை வில் இப்படத்தின் டீசர் வெளிவர வுள்ளது.#

Related posts

Chiyaan 60 FirstLook On 20th August

Jai Chandran

Yogi babu as hero in Kannan’s Periyandavar

Jai Chandran

SonyLIV gears up to release Tamil movie Maanaadu, on 24th December

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend