படம்:சூ மந்திரக்காளி
நடிப்பு:கார்த்திகேயன் வேலு,சஞ்சனா புரில், கிஷோர் தேவ், முஹில், மரகதம்,, நிரஞ்சனா, தரண்யா, கோவிந்த் மாயோன், வி.ஸ்ரீதர், சிங்கார வேலன், மேட்டூர் சேகர், வெங்கடெஷ் பாபு, மு.க.சின்னண்ணன், மைதிலி
தயாரிப்பு: அன்னக்கிளி வேலு அன்னம் மீடியாஸ்
பின்னணி இசை: நவிப் முருகன்
ஒளிப்பதிவு: தீனா
இயக்கம்: ஈஸ்வர் கொற்றவை
ஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.
பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக இருந்தாலும் மற்றவர்களுக்கு பிடிக்காது உடனே பில்லி சூன்யம் வைத்து அந்த குடும்பத்தை கெடுத்துவிடுவார்கள். அந்த குடும்பம் கெட்டால்தான் மற்றவர் களுக்கு சிரிப்பும் சந்தோஷமும். இவர்களை திருத்த வேண்டும் என்ற முடிவுடன் செய்வினை செய்யும் மலைகிராமத்துக்கு செல்லும் பங்காளியூர் இளைஞன் முருகன் அங்கிருந்து சக்தி வாய்ந்த ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து எல்லோரையும் பயமுறுத்தி நல்வழிப்படுத்த எண்ணுகிறார். மலைகிராமத்துக்கு செல்லும் முருகன் அங்கிருக்கும் அழகான மந்திரவாதி வள்ளியை கண்டு காதல் கொள்கிறார். ஆனால் அவரை மணக்க முடியாத சூழல். பங்காளி ஊர்க் கரர்களுக்கு விஷயம் தெரிந்து அவர்கள் முருகன் காதலை கெடுக்க முயல்கின்றனர். எதிர்ப்புகளை மீறி முருகனால் வள்ளியை கைப்பிடிக்க முடிந்ததா என்பதே கதை.
கதை என்னவோ காமெடியாக தெரிந்தாலும் அதில் உறவுக்காரர்களின் பொறாமையை இயக்குனர் விளக்கி சவுக்கடி கொடுத்திருப்பது பலருக்கு ஆறுதல் தரும் விஷயம்.
தொடக்கம் முதல் இறுதிவரை காமெடியாக செல்கிறது படம். கிராமத்துக்கு மாப்பிள்ளை பார்க்க வரும் பெண் வீட்டுக்காரரரிடம் ’எவ்வளவு நகை போடுவீங்க’ என்று விசாரிக்கும் டீ கடைக்காரர் அதிகமான நகை போடுவதாக சொன்னதும் மாப்பிள்ளையை பற்றி தவறாக சொல்லி விரட்டுவதும். குறைவான நகை போடுவதாக சொன்னால் மாப்பிள்ளை நல்லவர் என்று சொல்லி சிரிப்பதும் சிரிப்பின் தொடக்கம்.
மலைகிராமத்துக்கு சென்ற ஹீரோ கார்த்திகேயன் வேலு அங்குள்ள அழகான பெண் மந்திரவாதியை கண்டு காதல் கொள்வதும் அவரை மணப்பதற்காக படும் பாடுகளும் தொடர் சிரிப்பலைகள்.
சூன்யம் செய்யும் மலைகிராமத்தில் காணும் மந்திர தந்திர காட்சிகள் ஜி பூம் பா வேலைகளாக இருக்கிறது. மண்ணுக்கடியில் ஒரு மந்திரவாதி, அந்தரத்தில் மிதக்கும் மந்திரவாதி என்று செம ரீலாக இயக்குனர் விட்டிருந்தாலும் எல்லாமே ஜாலிக்குத்தான் என ரசிக்க தோணுகிறது.
வள்ளியாக வரும் சஞ்சனா புரில் மேக்கப் கலையாமல் நடித்தாலும் அழகாக நடித்திருக் கிறார். கூடவே வரும் இரண்டு சிறுமிகளும் நேரத்துக்கு ஏற்ப காமெடி செய்து கலகலக்க வைக்கின்றனர்.
நவீப் முருகன் இசையிலும், தீனா ஒளிப்பதி விலும் மந்திர தந்திர காட்சிகள். கைகொடுக்கின்றன.
கொரோனா காலகட்டத்தில் எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காட்சிகளை அமைத்து அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார் இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை.
சூ மந்திரக்காளி- சிரிப்புக்காளி.
previous post
next post