தமிழில் பிரபு, குஷ்பு நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சின்னதம்பி. இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இளையாராஜா இசை அமைத்திருந்தார். கே.பி பிலிம்ஸ் சார்பில் கே. பாலு தயாரித்திருந்தார். இவர் மாரடைப்பில் நேர்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராம நாராயணன், துணைத் தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன். டி. மன்னன், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சங்கத்தின் மூத்த உறுப்பினரும் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ராம்கி, அர்ஜுன் உட்பட முன்னணி நடிகர்கள் நடித்த சின்னத்தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம், பாஞ்சாலங்குறிச்சி, ஆகா என்னப் பொருத்தம் உட்பட 25 வெற்றிப் படங்களுக்கு மேல் தயாரித்தவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கே.ஆர்.ஜி. சத்யஜோதி தியாகராஜன், இராமநாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.ஆர், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் தலைவர்களாக இருந்த பொழுதும் தற்பொழுது என் .இராமசாமி என்கிற முரளி இராம நாராபணன் தலைவராக இருக்கையிலும் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் கே.பி. பிலிம்ஸ் உரிமையாளரான கே பாலு நேற்று இரவு காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று (2.01.2021) சனிக்கிழமை சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற்றது..
அன்னாரின் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.