சிம்பு நடிக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். பாலாஜி காபா தயாரித்திருக்கிறார். எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். நிதி அகர்வால், நந்திதா ஹீரோ யின்களாக நடிக்கின்றனர். பாரதிராஜா, மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின் றனர்.
ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதை சிம்பு கலந்து கொண்டு அதிரடியாக பேசி னார். அப்போது.’ ஈஸ்வரன் படம் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததுபோல் மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்’ என்றார்
நடிகர் சிம்பு பேசும்போது கூறியதாவது:
நான் இன்னைக்கு இங்கு நிற்க காராணமாக இருக்கிறவர்கள் என் ரசிகர்கள்தான். ஈஸ்வரன் படத்தில் நடித்ததில் எனக்கு சந்தோஷம். குறிப்பாக பட தயாரிப்பாளர் ரொம்பவும் ஆதரவு தந்து இப்படத்தை தயாரித்தார். அவருக்கு நன்றி. என்னுடைய டைரக்டர் சுசீந்திரன் சார். எல்லாருக்குமே ஒன்று புரியவில்லை. இத்தனை நாள் எப்படி நான் இருந்தேன் திடீர்னு எப்படி இப்படி மாறினேன். இது எப்படி நடந்தது. படம் எப்படி முடிந்து பொங்கலுக்கு வெளிவருகிறது என்று தெரியாமலிருந்தார்கள். உண்மையில் எனக்கும் தெரியவில்லங்க. இறைவ னுக்கு மட்டும்தான் தெரியும். ஈஸ்வரன் படம் எப்படி தொடங்கியதென்றால்.. மீண்டும் மாநாடு ஷூட்டிங் ஆரம்பிக்கணும் என்று எண்ணியபோது அப்படத்தில் நிறைய கூட்டம் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் அதை எப்படி செய்வது என்று தெரியா மலிருந்தது. விரைவாக ஒரு படம் ரசிகர்களுக்காக செய்ய வேண்டும் என்று நினைத் தோம், ஏற்கனவே சுசீந்திர னுடன் படம் செய்வது குறித்து பேசி இருந்தேன். முக்கியமாக இந்த படம் செய்ய காரணம் லாக்டவுன் சமயத்தில் எல்லோருமே மன உளைச் சலில் இருந்தார்கள், ரொம்ப நெகடிவான ஒரு சூழல் இருந்தது. ஈஸ்வரன் கதை கேட்டபிறகு ஒரு பாசிடிவ் என்ர்ஜி, மனதில் ஒரு தன்னம் பிக்கை வந்தது. கதை கேட்டதற்கே இவ்வளவு பாசிடிவ் எனர்ஜியாக இருக்கி றதே இப்படம் வந்தால் மக்களுக்கும் அந்த பாசிடிவ் எனர்ஜி, தன்னம்பிக்கையை கொடுக்கும் என்பதால்தான் இந்த ஈஸ்வரன் படம் செய் தேன்.
இப்போது எல்லா இடத்திலும் ரொம்ப நெகடிவிட்டி இருக்கி றது. யாரைப்பார்த்தாலும் யாருக்கும் பிடிக்கவில்லை. போட்டி, பொறாமை, எவன் எது செய்தாலும் ஒரு குரூப் உட்கார்ந்துக்கொண்டு இது சரியில்லை அது சரியில்லை, இவன் சரியில்லை அவன் சரியில்லை என்கிறது. இதெல்லாம் தேவைதானா. முதலில் அட்வைஸ் செய் வதை நிறுத்துங்கள். எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஏதோ ஒரு வலி இருக்கும். முதலில் சுற்றியி ருக்கிறவன்களிடம் அட்வைஸ் கேட்கிறதே நிறுத்துங்க. ஒரே விஷயம் நண்பனா சொல்கி றேன், வெளியில் எதுவும் இல்லை உள்ளே (மனசு) சரியாக வைத்துக்கொள்ளுங் கள் வெளியில் இருப்பதெல் லாம் சரியாகி விடும். ஒரு சமயம் என் வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டப்பட் டேன். மனசு ரொம்ப கஷ்டத் தில் இருந்தேன். அதனால்தான் என்னால் ஒழுங்காக ஷூட்டிங் போக முடியலே எதுவுமே என்னுடைய வாழ்க்கையில் சரியாகவே பண்ணமுடியலே எல்லாமே பிரச்னை.. இறைவன் எங்குமில்லை உள்ளேதான் இருக்கிறான். அதனால் உள்ளே சரி பண்ண னும், உள்ளே சரி செய்தேன் வெளியில் எல்லாம் சரியாகி விட்டது. எல்லோரிடமும் அன்பாக இருங்க, சண்டை சச்சரவு எதுவுமே வேண்டாம்.
நாங்க சினிமா செய்வதே தியேட்டருக்காகத்தான். தியேட்டர் இல்லாமல் சினிமா கிடையாது. சில பேர் வேறு தளங்களை பயன்படுத்து கிறார்கள் என்றால் அது அவர் கள் தனிப்பட்ட விஷயம். பொங்கலுக்கு தியேட்டரில் 100 சதவீதம் அனுமதி கொடுப் பதாக சொல்லியிருக்கிறார்கள். அரசுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா போன்ற ஏதோ ஒரு பிரச்னை வருகிறது என்றால் எதோவொரு நல்ல விஷயம் வரபோகிறது என்றுதான் அர்த்தம். எல்லோரும் பாசிடிவாக இருங்கள். இந்த படத்தில் தமன் இசை அருமையாக அமைத்திருக் கிறார். பாரதிராஜா இப்படத்தில் நடித்தபோது அவரை பார்த்த போது நான் இன்னும் ஓட வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் எல்லோரும் ஒரு பிளான்போடுகிறார்கள். அவனை கவிழ்க்கனும் இவனை கவிழ்க்கணும் என்று பார்க்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் மேல இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிற ஒருவன் சிரித்துக் கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் பிளானி இல்லாமல் பிரிபிரெஷன் (தயார்நிலை) வேண்டும். அப்போதுதான் எதுவும் நடக்கும். சுசீந்திரனிடம் பணியாற்றியது சந்தோஷம் நானே ஃபாஸ்ட் என்னைவிட ஃபாஸ்ட்ட படத்தை எடுத் தார். இனிமே பேச ஒண்ணு மில்ல. செயல் மட்டும்தான். நிறைய விஷயம் இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறேன் நிறைய விஷயம் இருக்கிறது.
இவ்வாறு சிம்பு பேசினார்.
இயக்குனர் பாரதிராஜா பேசும் போது,ஈஸ்வரன் படத்தி 28 நாளில் எடுத்து முடித்தார்கள். நான் கேள்வி பட்ட சிம்பு அவருடன் நடித்த பழகி பார்த்த சிம்பு வேறு. திறமை யானவர், நல்ல மனம் உள்ளவர்’ என்றார்.
Actpr Simbu Open Talk about his transformation
Simbu, Eswaran, சிம்பு, ஈஸ்வரன்,