அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் கடந்த சில காலமாகவே உடல்நலமில்லாமல் இருந்து வந்தார். கடந்த வாரம் அவரை ஜெயலலிதா தோழி சசிகலா மருத்துவமனையில் சென்று பார்த்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மதுசூதனனை பார்த்துநலம் விசாரித்தார்.
இந்நிலையில் மதுசூதனன் உடலநிலை மோசமடைந்து. தீவிரசிகிச்சைஅளித்தும் பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார்.
மதுசூதனன் உடல் மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று அதிகாலை எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அதிமுகவினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் . இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலின் இன்று காலை நேரில் வந்து மதுசூதனன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இவர்களை தொடர்ந்து சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மதுசூதனன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.