கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வேகேட் படம் பிப்ரவரி 5 அன்று திரைக்கு வர தயாராக உள்ளது. மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்.
நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை R. வேல் ஏற்றுள்ளார்.
எடிட்டிங் சுரேஷ் URS கையாண்டுள்ளார். கலை மார்ட்டின் கையாண்டுள்ளார். கார்திக் ராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா ஒரு பாடலும் பாடியுள்ளார் இப்படத்திற்கு மேலும் சிறப்பு… இப்படத்தின் ஊடக சந்திப்பு முடிந்து பிப்ரவரி 5 வெளியாக உள்ளது..