Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

*நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி*

நாவலை படமாக்கும் பாணி தில்லானா மோகனாம்பாள் காலத்திலிருந்து வெற்றி கண்டிருக்கிறது.  தில்லானா மோகனாம்பாள் படமே கொத்தமங்களம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலை கொண்டு படமாக்கப்பட்டதுதான். அதன்பிறகு உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல படங்கள் நாவலை கொண்டு படமாக்கப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படமும் வெக்கை நாவலை வைத்து படமானது.தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் கல்கி யின் சரித்திர நாவல் தான்.  அந்த வரிசையில் தற்போது மற்றொரு நாவல் படமாகிறது.

வி  ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்..

இந்தநிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. இந் நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி..விரைவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் தெரிவிக்கப்படும்.

Related posts

Prabhas to star as ‘Bhairava’ ‘Kalki 2898 AD’

Jai Chandran

அந்தகன் படம் புதிய அனுபவத்தை தரும்: பிரசாந்த் பேச்சு

Jai Chandran

ஹாலிவுட் செல்லும் ஜெ. எம். பஷீர், ஆர். அரவிந்தராஜ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend