Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டெவில் ( பட விமர்சனம்)

படம்:டெவில்

நடிப்பு: விதார்த், பூர்ணா, த்ரீ குன் ஏ. மிஷ்கின், ரமா

தயாரிப்பு: எச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர்

இசை: மிஷ்கின்

ஒளிப்பதிவு: கார்த்திக் குமார்

இயக்கம்: ஆதித்யா ஜி ஆர்.

பி ஆர் ஒ: சதீஷ்குமார்

வாழ்க்கையில் நடந்த  நிகழ்வு களை எண்ணியபடி கார் ஓட்டி வருகிறார் பூர்ணா அப்போது எதிரில்  மோட்டார் பைக்கில் வரும் த்ரிகுன் மீது மோதி விடுகிறார். அவர் மீது இறக்கப்பட்டு அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்கிறார். பிறகு வீட்டிலும் கொண்டு போய் விடுகிறார்.  இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் த்ரிகுன் பூர்ணாவை கட்டி அணைக்க முயல அவர் உதறி தள்ளிவிட்டு சென்று விடுகிறார். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் நமக்குள் ஒரு உறவு என்றால் அது நம் வாழ்க்கையை சுக்கு. நூறு ஆக்கிவிடும் என்று எச்சரிக்கிறார் அதையும் கேட்காமல் திரி குன்  பூர்ணாவை தேடி அவரது வீட்டுக்கு வருகிறார்.  வீட்டில் இருக்கும் கணவர். விதார்த். த்ரி குனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாக்குகிறார். இருவரும் கடுமை யாக மோதிக் கொள்கிறார்கள் இதில் விதார்த் கொல்லப்படு கிறார்.  அதைக் கண்டு  அலறுகிறார் பூர்ணா. இருவரும் கண் காணாத இடத்திற்கு சென்று வாழ்வோம் என்று திரி குன் பூர்ணாவிடம்  சொல்கிறார்.  ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொன்ன திரி குன் அப்படியே  பயந்து ஓட்டம் பிடிக்கிறார். அதன் பிறகு பூர்ணா எடுத்த முடிவு என்ன?   இறந்த விதார்த் உடல் என்ன வானது?  இந்த நிலையில் பூரண சந்திக்கும் ஒரு அபூர்வ ஆசாமி தரும் ஆசி என்ன?  என்பதற்கு டெவில் திரில்லாக பதில் அளிக்கிறது.

டெவில் என்றதும் ஏதோ பேய் படமாக இருக்கும் என்று எண்ணிய போது படத்தின் இறுதி கட்டம் நெருங்கும்போது அப்படி ஒரு சாயல்  தெரிந்தாலும் அது இல்லை.

பூர்ணா திரி குன் மீது காரை ஏற்றிவிட்டு  அவர் மீது பரிதாபப் பட்டு மருத்துவமனையில் சேர்ப்பது, பின்னர் அவருடன் நேரத்தை கழிப்பது,  சதுரங்க விளையாட்டு விளையாடுவது கடற்கரையில் ஜாலியாக உலா வருவது போன்ற காட்சிகள் இருவருக்கும் கள்ளத்தொடர்பை ஏற்படுத்தும் என்ற உறுதியை சொல்கிறது. ஆனால் திடீரென்று பூர்ணா திரிகுனை உதறிவிட்டு செல்வது எதிர்பார்க்காத திருப்பம்.

பார்த்தால்  நல்ல பிள்ளை போல் தான் இருக்கிறார் திரிகுன் ஆனால் அவர் பூர்ணாவை பார்க்கும் பார்வை,  அவரை அடைய வேண்டும் என்று எண்ணும் நோக்கம் அவரை வில்லத்தன பாத்திரத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது.

நாம் இருவரும் இணைந்தால் நம் வாழ்க்கை சுக்கு நூறாக நொறுக்கி விடும் என்று  பூர்ணா எச்சரிப்பது ஒரு காட்சியாக மட்டுமில்லாமல் இது போன்ற உறவுகளில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பல ஜோடி களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது. இயக்குனர் சொ ல்லும்  வார்த்தையை மனதில் வைத்தால் எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஆபத்துகளையும் இழப்பு களையும் இது போன்ற ஜோடிகள் தவிர்க்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கி றார். அதற்காக இயக்குனருக்கு ஒரு தனி பாராட்டு தெரிவிக்கலாம்.

கமர்சியல் தான் நோக்கம் என்றிருந்தால் இப்படி ஒரு பிரிவை பூர்ணாவுக்கும் திரி குனுக்கும் இயக்குனர் செய்திருக்க மாட்டார் மனம் தடுமாறி இருக்கும் ஜோடி களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக கமர்சியல் காம்ப்ரமைஸ் செய்யாமல் காட்சி இருப்பது  சிறப்பு.

விதார்த் நீண்ட நேரம் கழித்து படத்தில் தலை காட்டுகிறார் அவருக்கு இருட்டுக்கடை அல்வா கிடைத்தது போல் மற்றொரு ஜோடியை கொல குத்தாக அமைத்துக் கொடுத்திருக்கி றார்கள்.  அவருடன் என்ஜாய் என்ஜாய் என்று என்ஜாய் செய்கிறார்.
இன்னொரு பெண்ணுடன் விதார்த் நெருக்கமாக இருக்கும் நிலையை பூர்ணா பார்த்து ஷாக்  ஆகி  வீட்டுக்கு வந்து மௌனமாக அமர்ந்திருப்பதும்  அங்கு வரும் விதார்த் பூர்ணாவிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்து திடீரென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது எதிர்பார்க்காத ஷாக்.
பூர்ணாவை தேடிக்கொண்டு திரி குன் அவரது வீட்டுக்கே வந்து  பூர்ணாவை அழைப்பது படபடப்பு. திடீரென்று விதார்த் அவர்கள் எதிரே வந்து நின்று தாக்கப் பாய்வது பரபரப்பு
விதார்த்,  திரி குன் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையில் விதார்த் தலையில் அடித்து கொல்லப்படுவது வழக்கமான ஒரு காட்சியாக மாற்றி விடுகிறது ஆனால் அது அப்படி அல்ல என்று சொல்லும்படி திடீரென்று திகில் காட்சிகளை இயக்குனர் ஏற்றுவதும்,  ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி காணாமல் போன திரி குனை தேடி போகிற பூர்ணா அவரை காணாமல் தவிப்பதும், கடைசியில் யோக நிலையில் இருக்கும் மிஸ்கின் காலடியில் சென்று விழுவதும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  எதிர்பார்ப்பு பொய்யாக்காமல் பெரிதொரு திருப்பத்தை கிளைமாக்ஸ்  ஏற்படுத்துகிறது.

ஒரு சில படங்களுக்கு இயக்கு னர்கள் இரண்டு கிளைமாக்ஸ் களை எடுப்பது உண்டு.  ஒரு கிளைமாக்ஸ் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அந்த கிளைமாக்ஸ் தூக்கி விட்டு மற்றொரு கிளைமாக்ஸை வைப்பார்கள்.  கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இயக்குனர்  ஆதித்யா  டெவில் படத்திற்கும் இரண்டு கிளைமாக்ஸ்  எடுத்திருப்பார் போல் தெரிகிறது. இரண்டையுமே படத்தில் வைத்திருக்கிறார் யாருக்கு எது பிடிக்கிறதோ அதை ஓகே செய்து கொள்ளலாம்.

கிறித்துவ பாணி கதையாக சென்று கொண்டிருந்த திரைக் கதை கிளைமாக்சில் திடீரென்று இந்து கதையாக மாறி விடுகிறது. இது வெற்றிக்காக  இயக்குனர் கையாண்ட டெக்னிக்கோ.

.இப்படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே இசையில்   ஊறிப். போயிருக்கும் அவர் இசைய மைப்பாளராக மாறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த இசையை இப்படத்திற்கு தேவையான வகையில் பயன் படுத்தி ஒரு வெற்றி இசை அமைப்பாளராக தனது முத்திரையை முதல் படத்திலேயே பதித்திருக்கிறார் . இளைய ராஜாவின் டச் இருக்கவே செய் கிறது . இளையராஜாவிடம் இவர் ஏற்கனவே சண்டை போட்டிருந் தாலும் அவர்தான் தனக்கு இன்னொரு குரு என்று கூறிக் கொள்ளும்  தனது இசையில் அவரது  பாதிப்பு இல்லாமல் அவரால் விலகிச் சென்று விட முடியாது..

எச் பிச்சர்ஸ் ஹரி,  டச் ஸ்கிரீன் ஞானசேகர் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கின் றனர்.

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப் பதிவு செய்துள்ளார். டெவில் என்ற ஹாலிவுட் டைட்டிலுக்கு ஏற்ப தனது கேமராவையும் இருள் சூழ்ந்த ஒரு பின்னணியில் காட்சி களை படமாக்கி பார்வையை கூர்மைப்படுத்தி இருக்கிறார்.

ஒளிக்கு பிறகு இருளுக்கு அப்பாபால் என்ற  நாவலை தழுவி இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா. அத்துடன் நிற்காமல் தனது எண்ணத்தையும் கலந்து கிளைமாக்ஸ் அமைத்தி ருப்பது அவரது சாமர்த்தியத்தை காட்டுகிறது.

டெவில் பயமுறுத்தவில்லை மனதை பதப்படுத்துகிறது.

 

 

Related posts

அமேசான் டிஜிட்டல் தளத்தில் 5 தேசிய விருது வென்ற “சூரரைப்போற்று”

Jai Chandran

Divine Poster of Prabhas “Adipurush”

Jai Chandran

கண்களை இமைக்க நேரம் இருக்காது – சொல்கிறார் பிந்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend