தெலுங்கு பட மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ’ஆச்சார்யா’ படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பில் இன்றுமுதல் பங்கேற்கவிருந்தார். படப் பிடிப்புக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை யடுத்து அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கையில், ’ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிடிவ் என தெரியவந்தது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கடந்த சில நாட்களில் என்னை தொடர்புகொண்டவர்களும் தங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்பட்டுத் திக்கொள்ள கேட்டுக்கொள்கி றேன்.
இவ்வாறு சிரஞ்சீவி கூறி உள்ளார்.
சிரஞ்சீவி விரைந்து குணம் அடைய திரையுலகினரும் ரசிகர்களும் விருப்பம் தெரி வித்து வருகின்றனர்.
சிரஞ்சீவி நேற்றுமுந்தினம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து பேசினார். அவருடன் நடிகர் நாகார்ஜூனாவும் சென்றிருந்தார். தற்போது சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இருப்பதால் இதையடுத்து முதல்வர் மற்றும் நாகார்ஜூனா இருவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.