Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு..

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 7 மாத மாக தியேட்டர்கள் மூடப் பட்டிருந்தன. சினிமா படப் பிடிப்பு உள்ளிட்ட மற்ற பணி களுக்கு அனுமதி அளித்தும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட வில்லை.

தியேட்டர் அதிபர்கள் மத்திய மாநில அரசுக்கு தியேட்டர் திறக்க அனுமதி கேட்டு  கோரிக்கை வைத்த னர். இதையடுத்து கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மற்ற மாநிலங் களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தமிழகத் தில் அனுமதி கிடைக்க வில்லை.
தமிழ்நாடு திரை அரங்கு மல்டி பிளக்ஸ் சங்க கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை யில் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து  தியேட்டர் திறக்க அனுமதி கோரினர். அவர் அதை ஏற்று நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக் கைகளுடன் தியேட்டர் கள் திறக்க அனுமதி அளித் தார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் தியேட் டர்கள் திறக்கப்படவுள்ளன. முன்னதாக அனைத்து தியேட் டர்களும் வைரஸ் தொற்று ஒழிப்பு மருந்து  தெளிக்கப் பட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னையில் உள்ள பி வி ஆர் அண்ட் எஸ்பிஐ திரையரங்கு கள் டிக்கெட்கள் முன் பதிவு தொடங்கி உள்ளதாக அறிவித் திருக்கிறது. அதேபோல் வேலூர், கோவையிலும் டிக்கெட் முன்பதிவு நடக் கிறது. அரசு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு பாதுகாப்பு முக கவசம் அணிந்து ரசிகர்கள் அனைவரையும் வரவேற்ப தாக தியேட்டர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.
தியேட்டர் அதிபர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதில் மோதல் ஏற்பட்டுள்ளது. விபிஎப் கட்டணத்தை செலுத் தாவிட்டால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று பாரதிராஜா தலைமை யிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. ஆனால் அதை திரை அரங்கு உரிமையாளர்கள் ஏற்க வில்லை.
8 மாதத்துக்கு பிறகு தியேட்டர் கள் திறக்கப்படுவதால் ரசிகர் கள் உற்சாகம் அடைந்துள் ளனர். முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் புது படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

Theatre Open Tomorrow,
சினிமா தியேட்டர் நாளை திறப்பு,

Related posts

AishwaryaRajesh takes her first shot of the Covishield vaccine

Jai Chandran

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்து பகிர்ந்த கோப்ரா டீம்..

Jai Chandran

Nandini Karky launches online course for subtitling

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend