தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கதையம்சம் உள்ள படங்களை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். தற்போது, இடும்பன்காரி எனும் புதிய திரைப்படத்திற்காக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் பி டி அரசகுமாரின் பிடிகே பிலிம்ஸுடன் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் கைகோர்த்துள்ளது.
துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டன. புதுமுக இயக்குநர் அருல் அஜித் இயக்கும் இடும்பன்காரியில் ஷிவாதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், அனுபமா குமார், ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், இயக்குநர் வேலுபிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை அமீன் செய்ய, ‘தடம்’ புகழ் அருண்ராஜ் இசையமைக்கிறார். இக்னேஷியஸ் அஸ்வின் படத் தொகுப்பை கையாள்கிறார்.
படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இது நிறைவடைந்தவுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று, இடும்பன்காரி விரைவில் திரைக்கு வரவுள்ளது.
பார்வையாளர்களை அவர்களது இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்யேக அனுபவத்தை தரும் பரபரப்பு மிக்க துப்பறியும் திரில்லராக இடும்பன்காரி இருக்கும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.