Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிளடி பெகர் (பட விமர்சனம்)

படம்: பிளடி பெகர்

நடிப்பு: கவின், ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி மற்றும் பலர்

தயாரிப்பு: நெல்சன்

இசை: ஜென் மார்ட்டின்

ஒளிப்பதிவு; சுஜித்

இயக்கம்: சிவபாலன் முத்துக்குமார்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்

கை கால் சரி இலலை என்று பொய் சொல்லி பிச்சை எடுத்து வாழ்க்கையை கழிக்கிறார் கவின். அரண்மனையில் அன்னதானம் செய்கிறார்கள் என்று அங்கு செல்லும் கவின் யாருக்கும் தெரியாமல் அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார். அமைதி நிலவும் அந்த அரண்மனையில் யாருமே இல்லை என்று நினைத்து இங்கும் அங்கும் அலைகிறார்.  திடீரென்று அங்கு ஆள் நடமாட்டம் தெரிகிறது.  ஓடி ஒளிந்து கொள்கிறார். இந்த நிலையில் அரண்மனைக்குள் மர்ம சம்பவங்கள் நடக்கிறது  பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை பிரித்துக் கொள்வதில் சொந்தங்களுக்கு இடையே சர்ச்சை எழுகிறது அந்த நேரத்தில் அரண்மனைக்குள் நுழைந்த பிச்சைக்காரன் கவினை போலி வாரிசுதாரராக நியமித்து சொத்தை கொள்ளையடிக்க முல்கிறார் வழக்கறிஞர். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை குழப்பமான காமெடி களத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கவின் என்றதும் ஸ்டைலான ஒரு ஆட்டம் , தெனாவட்டான ஒரு நடிப்பு, கலர்ஃபுல் காதல் காட்சிகள் என்ற ஞாபகத்துடன் பிளடி பெகர் படத்தில் அமர்ந்தால் அசல் பிச்சைகாரனாகவே கண்முன் வந்து நின்று அதிர்ச்சி தருகிறார் கவின். ஏதோ ஒன்றிரண்டு காட்சிகளில் பிச்சைக்காரனாக வந்து பின்னர் அவர் வாழ்க்கை வேறு திசைக்கு செல்லும் என்று பார்த்தால் கடைசி வரை அவரை பிச்சைக்காரனாவே  வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரண்மனைக்குள் நுழைந்த பிறகாவது கவினுக்கு ஒரு மாற்று உடை கொடுத்து அசத்தலாக ஒரு ஆட்டத்தை போட வைப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.. லேசான ஒரு காஸ்ட்யூம் சேஞ்ச் கொடுத்து தோள்பட்டை இரண்டும் தூக்கியபடி அவர் நடப்பது எதற்காக என்று புரியவில்லை.

முழு படமும் ஒரு அரண்மனைக்குள் முடிக்க திட்டமிட்டு அதற்கேற்ப காட்சிகளை அமைத்திருப்பது பட்ஜெட்டின் சிக்கனத்தை வெளிப்படுத்துகிறது.

காமெடிக்காக ரெட்டின் கிங்ஸ்லி பயன்பட்டிருக்கிறார். அவரும் பேயாக வந்து யார் கண்ணுக்கும் தெரியாமல் கவின் கண்ணுக்கு மட்டுமே தெரியும்போது இதில் ஏதோ ஒரு முடிச்சை இயக்குனர் போட்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது அந்த மர்ம முடிச்சுதான் கிளைமாக்ஸ்  திறவுகோலாகிறது

படத்தின் புரமோஷனுக்காக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது அந்தப் பாடலையாவது படத்தில் ஒரு கனவு பாடலாக சேர்த்திருந்தால் கலர்ஃபுல்லாக இருந்திருக்கும். அதையும் மிஸ் செய்து விட்டார்கள்.

கவினுக்கு ஜோடி இருக்கிறதா? இல்லையா என்பது கூட கணிக்க முடியவில்லை. டார்க் காமெடி என்ற பெயரில் ஆளாளுக்கு சுந்தர் சி படம் போல் கையில்  உருட்டுக் கட்டை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்க சுற்றிக் கொண்டிருப்பது மட்டும்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.

இயக்குனர் நெல்சன் படத்தை முதல் படமாக தயாரித்திருக்கிறார். அவர் பாணியில் ஒரு பிளாக் காமெடி கதையாக இருந்தாலும் அவர் படம் அளவுக்கு பிளாக் காமெடி கைகொடுக்கவில்லை.

சிவபாலன் முத்துக்குமார் கதையில் இன்னும் கமர்சியல் அம்சங்களை சேர்த்திருக்கலாம். கவின் போன்ற ஒரு ஹீரோ கிடைக்கும்போது தனது திறமையை நிரூபித்து வெளிப்படுவதற்காக இன்னும் கூட ஸ்கிரிப்டில் கவனம் செலுத்தி கலக்கல் காமெடி ஸ்கிரிப்ட்டாக கொடுத்திருக்கலாம்.

பிளடி பெகர் –  புரியாத புதிர்.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

Related posts

Jayam Ravi starrer Agilan Promotional Event

Jai Chandran

அரிராஜன் இயக்கிய ” ஒழுக்கம் ” குறும்படம்!

Jai Chandran

படிப்பை யாராலும் பறிக்க முடியாது – மாணவர்கள் விழாவில் விஜய் பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend