Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒ மை டாக் (பட விமர்சனம்)

படம்: ஒ மை டாக்
நடிப்பு: அருண் விஜய், அர்னவ் விஜய், விஜயகுமார், பானுசந்தர், வினய் ராய், மகிமா நம்பியார், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சுவாமிநாதன், பிரியா விஜயகுமார், ஷ்ர்வன், பெமன்னி, சித்தி, க்ர்த்திக், ஜானகி, ஸ்பைக் ஜான்

தயாரிப்பு: 2டி என்டர்டெயின்மென்ட் சூர்யா, ஜோதிகா

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: கோபிநாத்

இயக்கம்: சரோவ் சண்முகம்

ரிலீஸ்: பிரைம் வீடியோ ஒ டி டி தளம்

பி ஆர் ஒ: யுவராஜ்

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அருண்விஜய் மனைவி,மகன், தந்தையுடன் ஊட்டியில் வசிக்கிறார். தனக்கு என்ன கஷ்டம் நேர்ந் தாலும் அதை மகனிடம் வெளிப்படுத்தாமல் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று சொல்லி வளர்க்கிறார். சேற்றில் இருக்கும் ஒரு குட்டி நாயை வீட்டுக்கு எடுத்து வரும் மகன் அதற்கு சிம்பா என பெயர் வைத்து வளர்க்கிறான். அதற்கு கண் தெரியாத நிலையில் ஆபரேஷன் செய்து பார்வை வரவழைக்கிறான். சிம்பாவுக்கு பயிற்சி கொடுத்து அதை போட்டியில் பங்கேற்க வைக்கிறான். போட்டியில் எப்போதும் ஜெயித்து சாம்பியன் பட்டம் வெல்லும் அபிநய் எப்படியாவது சிம்பாவை போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார். அதிலிருந்து மீண்டுவந்து சிம்பா எப்படி சாம்பியன் பட்டம் வெல்கிறது என்பதே கதை.

நாய் குட்டி கதைதானே என்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாதா கதையாக இதனை உருவாக்கி இருக்கும் இயக்குனர் சரோவ் சண்முகத்துக்கு முதலிலேயே ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும். கடுமையான உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்று சொல்லப்படும் எல்லா கதைகளும் ஜெயித்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்படமும் ஜெயிக்கும்.

மூன்று தலைமுறையான விஜயகுமார், அவரது மகன் அருண்குமார், பேரன் அர்னவ் இணைந்து நடித்திருக்கும் படம். மூவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் நடித்து வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கி றார்கள்.

அருண் விஜய் மகன் அர்னவ் விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். நட்சத்திர குடும்பத்திலிருந்து வந்த குட்டி நட்சத்திரம் என்பதை சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார் அர்னவ்.

நாய்க்குட்டி சிம்பா மீது பாசம் காட்டுவது அதற்கு கண் பார்வை வரவழைப்பதற்காக பணம் சேர்த்து வைத்தும் அந்த பணம் பத்தாமல் போனதால் டாக்டரிடம் சென்று தன்னிடம் இருக்கும் சில்லறை காசுகளை கொடுத்து எப்படியாவது ஆபரேஷன் செய்து சிம்பாவுக்கு பார்வை தரும்படி கண்ணீர்விட்டு அழுவது என நெகிழ வைக்கிறார்.

கிளைமாக்ஸில் சிம்பாவை போட்டியில் பங்கேற்க விடாமல் வினய் சதி செய்தாலும் அதை முறியடித்து சாம்பியன் பட்டம் பெற வைக்கும்போது அர்னவ் அப்ளாஸ் அள்ளிவிடுகிறார்.

அருண் விஜய் அளவுடன் நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். பார்வை குறைபாடுள்ள நாய் சிம்பாவை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று நடுவர்கள் சொன்னதும் சிம்பாவை எப்படி கண்டெடுத்து வளர்த்தோம் அதன் மீது அர்னவ் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என்பதை சொல்லி போட்டியில் பங்கேற்க பர்மிஷன் வாங்கும் போது நிறைவான் நடிப்பால் ஜொலிக்கிறார் அருண் விஜய்.

விஜயகுமார் எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார்.

வில்லன் வினய் ராய் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் கருவியாக பயன்பட்டிருக் கிறார்.

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரித்திருக்கின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்
இயக்குனர் சரோவ் சண்முகம் கதையை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர் களுக்கும் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் விதமான காட்சிகள் அமைத்து வெற்றிக்கான பார்முளாவை கையாண்டு வசப்படுத்தியிருக் கிறார்.

ஒளிப்பதிவாளர் கோபிநாத் கைவண்ணம் காட்சிகளை வண்ணமயமாக்கி இருக்கிறது.

காட்சிகள் சலிப்பை ஏற்படுத்திவிடாதவண்ணம் நறுக்கான எடிட்டிங்கில் திறமைகாட்டியிருக் கிறார் மேகநாதன்.

சீன்களை ஓவர்டேக் செய்யாமல் மென்மையான இசையால் மனதில் நுழைகிறார் இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

ஒ மை டாக்- குழந்தைளை மட்டுமல்ல குடும்பத்தினரையும் கவரும்

By

Jayachandran

 

Related posts

Sneak peek from Samuthirakani In Public

Jai Chandran

RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE

Jai Chandran

தீபாவளிக்கு விக்ரம்பிரபுவின் “ரெய்டு”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend