எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலமடைந்து சீக்கிரம் மீண்டு வரவேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
இது ஒரு பொன்மாலை பொழுது.. இன்ற ளவும் உலகமே கேட்டு வியந்து போகும் பாடல். வைரமுத்து அங்குதான் உதிக்கி றான். பொன் மாலை பொழுது நீ பாட லாம்..
ஆனால் உனக்கு பொன்மாலை பொழுது வரக்கூடாது.. பொன் காலை பொழுதுதான் வரவேண்டும். பாலு.. நான் மட்டும் இல்லடா.. உலகத்தில் உள்ள அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விடுகி றோம்.
இரண்டு நாட்களாக நான் விடும் கண்ணீர்.. அது என் கன்னங்களில் வழியும் போது அதை துடைத்து துடைத்து எறிந்து கொண்டிருக்கிறேன். இப்போது கூட இந்த பதிவில் அது வந்துவிடக்கூடாது என நான் நிதானமாக பேசுகிறேன். பாலு வந்துரு வடா.. நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் உண்மை என்றால் நீ மறுபடியும் வருகிறாய். எங்களுடன் பழகுகிறாய்.. இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில்.. வந்து ருடா பாலு..
இவ்வாறு கூறியபோது கதறி அழுதார் பாரதிராஜா
Bharathiraja and SPB’s Old Memories,
Bharathiraja, SPB,
பாரதிராஜா கதறல்,
எஸ்பிபி நினைவுகளுடன் பாரதிராஜா,