படம்: ஓ மணப்பெண்ணே
நடிப்பு: ஹரிஸ் கல்யாண், பிரியா பவான் சங்கர், வேணு அரவிந்த்,கேஎஸ்ஜி வெங்கடேஷ், அன்புதாசன், அபிஷேக் குமார், குக் வித் கோமாளி 2 அஷ்வின்
தயாரிப்பு: ஏ ஸ்டுடியோஸ் எஸ் பி. சினிமாஸ்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு:கிருஷ்ணன் வசந்த்
இயக்கம்:கார்த்திக் சுந்தர்
ரிலீஸ்: டிஸ்னி ஹாட் ஸ்டார்
பி.ஆர்.ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா நாசர்
என்ஜினியரிங் பட்டதாரியான ஹரிஸ் கல்யாண் தனது அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றாலும் படுசோம்பல்வாதி. வேலைக்கு செல்லாமல் வெட்டியாக நண்பர்களுடன் பொழுதை கழிக்கிறார். பெண்ணை மணக்கும்போது அப்போது வரும் வர்தடசணையை வட்டிக்குவிட்ய் அதை வைத்து வாழலாம் என்று எண்ணுகிறார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவர் என்று ஜோதிடரும் சொல்வதை கேட்டு திருமணம்செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர்.பெண் பார்க்கச் சென்றவர்கள் சரியான அட்ரஸுக்கு செல்லாமல் பிரியா பவானி வீட்டுக்கு செல்கின்றனர். அந்த வீட்டில் ஷரிஸும், பிரியாவும் தனிமையில் சில மணி நேரம் பேசும்வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது மனம் விட்டு பேசி தங்களின் பழைய காதல் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டு ஒரு புரிதலுக்கு வருகின்றனர். ஹரிஸ் எப்படியாவது ஒரு நடமாடும் உணவகம் திறக்க எண்ணுகிறார். அதற்கு பிரியா பவானியும் நண்பர்களும் உதவுகின்றனர். இதற்கிடையில் ஹரிஸுக்கு பணக்கார பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. அதற்கு பெண்ணின் தந்தை ஹரிஸின் திறமையைநிரூபிக்க வேண்டும் என்று கண்டிஷன் விதிக்கி றார். இப்படியொரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொள்ளும் ஹரிஸின் வாழ்க்கை எந்த திசையில் போய் நிற்கிறது, அவரால் தொழிலில் வெற்றி பெற முடிந்ததா? யாரை மணக்கிறார் என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
தெலுங்கில் விஜய தேவரகொண்டா, ரிதுவர்மா நடித்து ஹிட்டான ’பெல்லி சூப்புலு’ படமே தமிழில் ’ஒ மணப்பெண்ணே’ வாக ரீமேக் ஆகி இருக்கிறது.
இந்த படம் தெலுங்கில் 5 வருடங் களுக்கு முன்பு வெளியானது. அப்போதே இப்படம் ஹரிஸ் கல்யாண் நடிக்க அவரை தேடி வந்தது.பின்னர் அவரைவிட்டு நழுவியது. சில பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹரிஸுக்கே அப்படம் அமைந்தி ருக்கிறது.படத்தை அவரது நண்பர் கார்த்திக் சுந்தர் இயக்கி உள்ளார். இளம் பட்டாளங்கள் ஒரு டீமாக இணைந்து இப்படத்தை உருவாக்கி இருப்பதால் காட்சிகளும் இளமை பொலிவுடன் இருக்கிறது.
மேலோட்டாமாக பார்த்தால் இது காதல் கதை என்று தோன்றினாலும் உள்ளுக்குள் உழைப்புக்கு கிடைக்கும் வெற்றி பற்றிய கருத்தை வைத்திருப்பது பலம்.
ஹரிஸ் கல்யாண் தனது கதாபாத்திரம் தன் நிஜவழ்க்கையோடு தொடர்பு டையதாக ஏற்கனவே குறிப்பிட்டி ருக்கிறார். அதனால் வேடத்தில் ஒன்றி நடித்திருப்பது எதர்த்தமாகவே அமைந் திருக்கிறது.
தந்தையிடம் அடிக்கடி டோஸ் வாங்கி சாளிப்பத்தும் ஒரு கட்டத்தில் மனம் மாறி தொழிலில் ஜெயிக்கா எண்ணுவதும் காட்சிகளை தொய்வில் லாமல் நகர்த்துகிறது.
பிரியா பவானி அமைதியான நடிப்பில் கவனத்தை ஈர்க்கிறார்.அவரது நடிப்பில் ஒரு பக்குவம் வெளிப்படு கிறது. ஹரிஸ் முன்னேற்றத்துக்காக அவர் தரும் ஆதரவு ஊக்கம் தரும் காட்சிகள்.
ஹரிஸ் நண்பர்களாக நடித்திருக்கும் அன்புதாசன், அபிசேக் குமார் புதுமுகங்களாக இருப்பதால் வழக்கமான பழைய காமெடிகளுக்கு பை பை சொல்லி புது மணம் வீசச் செய்திருக்கின்றனர்.
ஹரிஸ் தந்தையாக வேணு அரவிந்த், பிரியா பவானியின் தந்தையாக கே எஸ் ஜி வெங்கடேஷ் பொறுப்புடன்
நடித்திருக்கின்றனர்.
இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசை பிளஸ். அதேபோல் பாடல்களில் பழைய ராகங்களை தவழவிட்டிருப்பது தாளம்போட வைக்கிறது.
வண்ண மயமாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்.
ரீ மேக் கதையாக இருந்தாலும் தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுந்தர் . ஒருசிலகாட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் நறுக்கான படமாக அமைந்திருக்கும்.
ஓ மணப்பெண்ணே – ஒ டி டி ருசிகர விருந்து.