Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பல்டி (பட விமர்சனம்)

படம்: பல்டி
நடிப்பு: ஷேன் நிகம், சாந்தனு, பிரீத்தி அஸ்வராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன்,

தயாரிப்பு: சந்தோஷ். டி.

இசை: சாய் அபயங்கர்

ஒளிப்பதிவு: அலெக்ஸ் ஜே புலிகல்

இயக்கம்: உன்னி சிவலிங்கம்

பிஆர் ஓ: யுவராஜ்

உதயன் (ஷேன் நிகம்), குமார் (சாந்தனு) உள்ளிட்ட நான்கு நண்பர்கள் கபடி போட்டியில் தங்கள் அணி தவிர மற்ற அணிகளுக்கும் பணம் வாங்கிக்கொண்டு விளையாடுவார்கள். இவர்கள் சோடா பாபு (அல்போன்ஸ் புத்திரன்)வுக்கு ஆடுவதாக கூறிவிட்டு பைரவன் (செல்வராகவன்) அணிக்கு ஆடுகிறார்கள். ஒரு கட்டத்தில் விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள் பைரவனுக்கு அடியாளாக மாறிவிடுகிறார்கள். உதயன் காதலியை கையை பிடித்து இழுக்கும் பைரவன் ஆளை உதயன் தாக்க பெரும் மோதலாக மாறுகிறது. ஒரு சமயம் பைரவனையே உதயன் தாக்க அவர்களை கொல்ல பைரவன் ரவுடிகளை அனுப்புகிறார். அதன் பிறகு நடப்பது என்ன. என்பதற்கு ரத்தக்களரியாக பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

மலையாளம் தமிழில் உருவாகி இருக்கும் பல்டி படத்தில் 14 வருடத்திற்கு பிறகு சாந்தனு மீண்டும் நடித்திருக்கிறார் அவருடன் ஹீரோவாக ஷேன் நிகம் நடித்துள்ளார்.

ஷேன் நிகம், சாந்தனு பங்கேற்கும் கபடி போட்டிகள் முதல்பாதி படத்தை அதற்குள் இடைவேளை வந்து விட்டதா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு விறுவிறுவென்று செல்கிறது. இப்படியேதான் படம் வேகமாக செல்லப் போகிறது என்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு கதையின் போக்கே வழக்கமான ஒரு கந்துவட்டி களத்துக்கு மாறி விடுவது படத்தை முடக்கி போட்டு விடுகிறது.

ஷேன் நிகமிற்கு பாசிட்டிவான ஒரு கதாபாத்திரம்தான். ஆனால் சாந்தனுவுக்கு நண்பர்களுக்கு துரோகம் செய்யும் ஒரு வில்லன் பாத்திரத்தை கொடுத்து அவரை முழு வில்லனாகவே மாற்றி இருக்கிறார்கள்.

பைரவன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருக்கிறார் . உட்கார்ந்த இடத்திலேயே உருட்டல் மிரட்டல் செய்து வில்லத்தனம் செய்கிறார். பெரிதாக எடுபடவில்லை. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சோடா பாபு கதாபாத்திரத்தில் யார் இந்த புது நடிகர் என்று கேட்க வைக்கிறார்.

கறுப்பு மேக்கப் போட்டுக் கொண்டு கதாநாயகியாக வரும் ப்ரீத்தி அஸ்ராணிக்கு போதிய வாய்ப்பு இல்லை.

சந்தோஷ். டி. படத்தை தயாரித்திருக்கிறார்.

சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளன.

அலெக்ஸ் ஜே புலிகல் கேமரா சில சமயம் ஆக்சன் காட்சிகளுக்காக சிவப்பு நிறத்துக்கு மாறிவிடுகிறது

உன்னி சிவலிங்கம் தமிழ்நாடு கேரளா பார்டருக்கு இடையே நடக்கும் ஒரு கதையாக இயக்கி இருக்கிறார். கலவை சரியில்லை.

பல்டி – முதல் பாதி கதை இரண்டாம் பாதியில் அடிக்கிறது பல்டி.

 

Review By

.k.Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

Kaml beginning the third phase of election campaign from today

Jai Chandran

IswaryaMurugan Gearing up for January 13 release..

Jai Chandran

யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend