Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் கரூர் பிரச்சாரத்தின் போது நெரிசலில் சிக்கி 39 பேர் பலி

தவெக தலைவர் விஜய் 2026ம் ஆண்டுநடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமை அவர் தனது பிரச்சாரத்தை வெவ்வேறு இடங்களில் தேர்வு செய்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல் கரூர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது 0 நல்லா இருக்கானுக்கான ரசிகர்கள் பொதுமக்கள் திருடர் வந்தனர். பஸ் கூரை மீது நின்றபடி கரூரில் பிரச்சாரம் செய்தபோது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி இளைஞர்கள்,
பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. .குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியை தலைவர்களும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.


முன்னதாக கரூரில் நடந்த சம்பவம் பற்றி நடிகர் விஜய்யிடம் பத்திரிகையாளர்கள் கருத்துக்கட்ட முயன்ற போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்னை திருப்பிவிட்டார். தனது எக்ஸ் தளத்தில் இதயம் நொறுங்கி இருக்கிறேன், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டார்.
இந்நிலையில் கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்ல பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூருக்கு நேரில் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் கூறினார்கள்.
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெருசலில் சிக்கி இருந்த குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம், மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தல ஒரு லட்சம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தவுடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

 

Related posts

Moonu Muppathi Moonu Releasing In theatres

Jai Chandran

Archana in Arulnithi’s ‘Demonte Colony 2

Jai Chandran

அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட முன் வெளியீட்டு விழா !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend