Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரைட் (பட விமர்சனம்)

படம்: ரைட்

நடிப்பு: நட்டி, அருண்பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா

தயாரிப்பு: திருமால்

இசை: குணா சுப்ரமணியன்

ஒளிப்பதிவு: எம் பத்மேஷ்

இயக்கம்: சுப்ரமணியன் ரமேஷ் குமார்

பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

மகனை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் தர வருகிறார் சக்திவேல் பாண்டியன் (அருண் பாண்டியன்). ஆனால் புகாரை வாங்கிய ரைட்டர் (மூணாறு ரமேஷ்) தூக்கி வீசுகிறார். இதற்கிடையில் பிரதமர் பாதுகாப்புக்கு இன்ஸ்பெக்டர் ரகுராம் ( நட்டி) சென்று விடுகிறார். இந்த நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. போலீஸ் நிலையத்தை விட்டு யாராவது வெளியே செல்ல முயன்றால் மொத்த போலீஸ் நிலையமும் வெடித்து சிதறிவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. வெடிகுண்டு வைத்தது யார்? போலீஸ் நிலையத்துக்குள் சிக்கியவர்கள் உயிருடன் தப்பிக்க முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

நிறைய திரில்லர் சஸ்பென்ஸ் படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் சில படங்கள் எதிர்பாராத சஸ்பென்ஸ் படங்களாக இருக்கும். அந்த வரிசை படமாக தான் ரைட் வந்திருக்கிறது.

மகனை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் அருண்பாண்டியன் புகார் தருவதும் ஆனால் அவரிடம் முரட்டுத்தனமாக பேசி மூணாறு ரமேஷ் விரட்டுவதும் வழக்கமான காட்சிதானே என்று எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று ஒட்டுமொத்த போலீஸ் நிலையத்துக்கும் ஆப்பு வைப்பது போல் ஒட்டுமொத்த போலீஸ் நிலையமும் வெடிக்கும் வகையில் வெடிகுண்டு இருப்பதாக வரும் மர்ம நபரின் மிரட்டல் நிமிர வைக்கிறது.

போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது யாராவது போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் செல்ல முயன்றால் உடனே வெடிகுண்டு வெடிக்கும் என்ற எச்சரிக்கை தெரிந்தவுடன் அந்த விவரம் தெரியாமல் ஒவ்வொருவராக வந்து போலீஸ் நிலையத்திற்குள் சிக்கிக்கொண்டு வெளியில் செல்ல முடியாமல் தவிப்பதும் ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையத்தை நீதிமன்றமாக்கி நீதிபதியையே போலீசின் நிலையத்துக்குள் வரவழைத்து அவரையும் வெடிகுண்டு வளையத்தில் சிக்க வைப்பதும் எதிர்பாராத திருப்பங்கள் மட்டுமல்ல தரமான சம்பவம்.
படம் முழுவதும் எந்த நேரத்தில் எந்த குண்டு வெடிக்குமோ என்ற பரபரப்பு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ரைட்டர் மூணாறு ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் அக்ஷரா ரெட்டி, புகார் தர வந்த அருண்பாண்டியன் மூவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
அறிமுக நடிகையாக வரும் அக்ஷரா ரெட்டி சேலை கட்டிக்கொண்டிருந்தாலும் போலீஸ் சீற்றத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலீஸ் நிலையத்திலேயே நீதிமன்றம் அமைத்து நீதிபதியாக வினோதினி நீதிபதிக்கான கண்ணியத்தையும் விட்டுவிடாமல் அதே நேரத்தில் வெடிகுண்டு பயத்தையும் நாசுக்காக காட்டிக்கொண்டு நடிப்பதெல்லாம் இதுவரை அவரிடம் காணாத நடிப்பு.

இன்ஸ்பெக்டர் நட்டி பிரதமர் பாதுகாப்புக்காக சென்றாலும் கிளைமாக்ஸ்சில் நடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார்.

ஆதித்யா, யுவினா காதல் ஜோடிகளாக சஸ்பென்ஸ் பாத்திரமாக வருவது திருப்புமுனை.

திருமால் படத்தை தயாரித்திருக்கிறார்.

குணா சுப்ரமணியன் இசை, எம் பத்மேஷ் ஒளிப்பதிவு படத்துக்கு தாங்கிப் பிடிக்கிறது.

இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் திரைக்கதையில் தீவிர கவனம்  செலுத்தியிருப்பது அப்ளாஸ் பெறுகிறது.

ரைட் – பாசிட்டிவான டைட்டில் மட்டுமல்ல பார்க்க தகுந்த படம்.

Review By K.Jayachandhiran

trendingcinemasnow.com

( Web Site)

 

Related posts

Isari Ganesh Thank Team of Taekwondo Federation of India

Jai Chandran

‘என் கண்மணி என் காதலி’ பாடல்.. பாலு ஞாபகமிருக்கா. எஸ் பி பிக்காக சிவகுமார் வீடியோ

Jai Chandran

ஆஹா சார்பில் கல்விக்கான நன்கொடையை வழங்கும் ‘ விஜய் சேதுபதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend