Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“அவள் பெயர் தமிழரசி” பட கதாநாயகியின் “மாயமுகி”

டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் படம் ‘மாயமுகி. சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார்.

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, ’வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோ சித்ரா நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், ‘தூத்துக்குடி’ பட புகழ் கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஆன்மீக பேண்டஸி திரைப்படமாக இப்படம் உருவாகிறது. பேண்டஸி ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறது.

பிரகாஷ் என்.பத்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயன் பாலா இசையமைக்கிறார். காதல் மதி பாடல்கள் எழுத, டேனியல் – சந்தோஷ் படத்தொகுப்பு செய்கிறார். சந்திரமோகன் கலையை நிர்மாணிக்க, ஸ்டார் விஜய் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சாய் பாரதி நடனம் அமைக்க,
மக்கள் தொடர்பாளர்களாக சுரேஷ் சுகு – தர்மதுரை பணியாற்றுகிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் மிக பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் ’மாயமுகி’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

Related posts

DevaDasBrothers Now Running In Theatres

Jai Chandran

“ரௌத்திரம்” மகிழ்ச்சியில் அரவிந்த்சாமி

Jai Chandran

பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து காதல் கீதம் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend