படம்: அதோ முகம்
நடிப்பு: எஸ். பி. சித்தார்த், சைதன்யா பிரதாப், அருண் பாண்டியன் , ஆனந்தநாத் மற்றும் பலர்
தயாரிப்பு: ரீல் பெட்டி
இசை: மணிகண்டன் முரளி,
பின்னணி இசை: விஷ்ணு ராகவன்
ஒளிப்பதிவு: அருண் விஜயகுமார்
இயக்கம்: சுனில் தேவ்
பி ஆர் ஓ: குமரேசன்
மார்ட்டின் (எஸ்பி சித்தார்த்) பால் அனந்த நாக்) இருவரும் சிறுவயது நண்பர்கள். அவர்களின் தந்தையும் இணை பிரியாத நண்பர்களாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் மார்ட்டின் தந்தை விபத்தில் இறந்து விடுகிறார். பிறகு மார்ட்டினை பாலின் தந்தை எடுத்து வளர்க்கிறார். அவருக்கு ஒரு வீடும் கட்டித் தந்து திருமணமும் செய்து வைக்கிறார். ஊட்டியில் உள்ள தன்னுடைய 300 ஏக்கர் எஸ்டேட்டை கவனித்துக் கொள்ள அவரை மேனேஜராக நண்பன் பால் நியமிக்கிறான். இதற்கிடையில் மார்ட்டினின் மனைவிக்கு மிரட்டல்கள் வருகின்றன. அதை ஸ்பை கேமரா மூலம் மார்ட்டின் கண்காணிக் கிறான். ஒரு கட்டத்தில் மார்ட்டினை கொலை செய்ய வேண்டும் என்று அவரது மனைவிக்கு உத்தரவு வருகிறது. அதை ஏற்று அவளும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு செல்கிறாள். மார்ட்டினை கொல்வதற்கு மிரட்டல் விடுத்தது யார் ? கணவனை கொல்வதற்கு மனைவி துணிவது ஏன் ? என்ற விடை தெரியாத கேள்விகளுக்கு எதிர்பார்க்காத திருப்பங்களுடன் அதோ முகம் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
நிறைய சஸ்பென்ஸ் திரில்லர், கிரைம் திரில்லர் போன்ற படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன அதில் ஒரு சில படங்கள் மட்டும் ரசிகர்களை கவர்கின்றன. அதற்கு காரணம் ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவுக்கு அதில் க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் இருப்பதுதான் அந்த வகையில் அதோ முகம் படமும் ரசிகர்களால் உடனே யூகிக்க முடியாத திருப்பங் களுடன் கூடிய ஒரு ஸ்கிரிப்ட்டாக வந்திருக்கிறது.
மார்ட்டினாக எஸ்பி சித்தார்த் அவரது நண்பர் பால் ஆக ஆனந்த் நாக் மார்ட்டின் மனைவியாக சைதன்ய பிரதாப் நடித்துள்ளனர்.
சித்தார்த், சைதன்யா இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருக்கின்றனர். இவர்களுக்குள் ஒரு காதல் , ஒரு பிரிவு, பின்பு கூடல் என்று ஒரு சிறிய பிளாஷ் பேக்கும் இருக்கிறது அது மாலை நேரத்து தென்றல்போல் இதமாக வீசுகிறது.
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரது செல்போனில் ஹைட் பேஸ் என்ற ஒரு செயலியை சித்தார்த் இன்ஸ்டால் பண்ண அதன் மூலம் அவர் வீட்டில் நடக்கும் விஷயங். களை அலுவலகத்தில் இருந்து கண்காணித்து பல்வேறு ஷாக்கான நடவடிக்கைகளை அறிவது காட்சிகளை வேகமாக நகர்த்துகிறது.
கட்டிய மனைவியே தனக்கு எதிராக சதி செய்கிறாரோ என்று எண்ணி சித்தார்த் கலங்கும் சம்பவங்கள் உச் கொட்ட வைக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் சைதன்ய பிரதாப் அந்த கதாபாத் திரத்திற்கு எப்படியெல்லாம் தனது முகபாவனையை மாற்ற வேண்டுமோ அப்படி எல்லாம் நுணுக்கமாக தனது முக பாவனைகளை மாற்றி ஒரு அப்ராணி போல் நடிப்பது அவரது திறம்பட்ட நடிப்புக்கு ஒரு சான்று.
சித்தார்த்தின் நண்பராக வரும் ஆனந்த நாக். எஸ்டேட் ஓனருக் கான கெத்திலேயே நடித்திருக்கி றார். பொறாமை பிடித்த பக்கத்து எஸ்டேட் ஓனர். முக்கிய கதாபத்திர மாக இருப்பது சஸ்பென்ஸசுக்கு உரம் சேர்க்கிறது
கெஸ்ட் ரோலில் அருண் பாண்டியன் ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி ஆக தலை காட்டுகிறார். படம் பற்றி இதற்கு மேல் எதைக் கூறினாலும் கதையின் சஸ்பென்ஸ் தெரிந்து விடும் என்பதால் இதற்கு மேல் எந்த க்ளுவும் வேண்டாம்.
ரீல் பெட்டி நிறுவனம் தயாரித். திருக்கிறது.
சுனில் தேவ் எழுதி இயக்கியிருக் கிறார். நிறைய மெனக்கெடல்கள் செய்திருப்பதால் கதையின் சஸ்பென்ஸ் கடைசி வரை உடைபட வில்லை
ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமார் படத்தை ஊட்டியின் உள்ளும் புறமும் , இருளும் பகலும் என்று பீய்த்து மேய்ந்திருக்கிறார்.
மணிகண்டன் முரளி இசைய மைக்க பின்னணி இசையை சரண் ராகவன் அமைத்திருக்கிறார்.
படத்தின் கட்டுக்கோப்பு குலையாத சஸ்பென்சுக்கு முக்கிய காரணம் எடிட்டர் விஷ்ணு விஜயனின் கைவண்ணமும் கைகொடுக் கிறது.
அதோ முகம்- சஸ்பென்ஸ் ஷாக்