Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர் பட டைட்டில் படத்தில் சென்சார் போட்ட கத்திரி: இயக்குனர் பரபரப்பு

நடிகர் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படம் மூலம் இயக்கு நராக அறிமுமானவர் பிரசாத் ராமர். அடுத்து இவர், “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்ற படத்தை இயக்குகிறார்.

பூர்வா புரொட க்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல பாடகர்-இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரிக்கிறார்.
இதில் புதுமுகம் செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” படம் பற்றி இயக்குநர் பிரசாத் ராமர் கூறியதாவது:
எம்ஜிஆர் பட பாடலில் இடம் பெற்ற” நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்று இப்படத்தின் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் கதை பற்றி கூற வேண்டுமென்றால்,, “இந்த காலகட்ட இளைஞர்கள் ஒரு பெண்ணுடன் பழகினாலே அதை சமுதாயம் வேறு கண்ணோட்டத். தோடு பார்க்கிறது.

மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை இரண்டு இளைஞர்கள் அடைகிறார்கள் . . பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் ஒரு பெண்ணும் இணைகிறார். அவர்களை சுற்றித்தான் இப்படத்தின் கதை சுழல்கிறது. ஆனால் இது ஒரு காதல் கதை அல்ல. பூம்புகார் செல்வதற்குள் தங்களுடன் இணையும் அந்த பெண் ணிடம் கதாநாயகன் ஒன்றை அடைய முயல்கிறான் அதை அவனால் அடைய முடிந்ததா என்பதும் கதையின் மற்றொரு பகுதியாக இதில் இணைந்திருக்கிறது.

இப்படத்தில் கதாநாயகனாக  நடிப்பதற்காக புதுமுகங்களை தேர்வு செய்ய ஆடிஷன் நடந்தது.  அதில் சினிமா பற்றி தெரியாத செந்தூர் பாண்டியன் ஹீரோவாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக ப்ரித்தி கரனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து விட்டேன். . இதில் இவரது கதாபாத் திரம் கதைக்கு முதுகெலும்பு போன்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே இயக்குனர் மிஷ்கின் படத்தில் ப்ரீத்தி நடித்திருக்கிறார். இப்படத்தில் இவரைத் தவிர மற்ற எல்லோருமே புதுமுகங்கள் தான் நடித்தி ருக்கிறார்கள்.

இதுவொரு காதல் கதை  படம் அல்ல. யாருக்கும் அறிவுரை சொல்லும் படமாகவும் இருக்காது. சமுதாயத்தில் இளைஞர்கள் மத்தியில் நிலவும் சூழலை சுட்டிக்காட்டி சமுதாயத்திடமே பல்வேறு கேள்விகளை வைக்கும் கதையாக இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

படத்தில் ஒரு காட்சியில் சினிமா தியேட்டரில் ஜோடி ஒன்று முத்தமிடுவது போல் நடித்த காட்சியில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற ஒரு பாடல் பின்னணியாக அமைக்கப்பட்டிருந்தது.அதற்கு தணிக்கை குழுவில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாடல் வரிகள் அந்த காட்சி யில் இருந்து நீக்கப்பட்டன. அதேபோல் ஒரு மற்றொரு காட்சிக்கு தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தது. இப்படம்  ஒரு அடல்ட் காமெடி கன்டென்ட் படமாக உருவாகி இருக்கிறது.

படத்தில் காட்சிகள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை.  நாம் பார்க்கும் பகுதி எப்படி நம் கண்களுக்கு எதார்த்தமாக தோன்றுகிறதோ அதே வகையில் தான் இப்படத்தின் காட்சிகளும் இருக்க வேண்டும் என்பதற்காக அழகியல் எதையும் கூடுதலாக சேர்க்காமல் இயற்கை யாகவே காட்சிகள் அமையும் விதமாக படமாக்கப்பட்டிருக் கின்றது.
எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் என்ற டைட்டிலை சமீபத்தில் ஒரு படத்திற்கு வைத்தபோது அதற்கு ஆட்சேபம் ஏற்பட்டது இதையடுத்து அந்த படத்தின் பெயர் குயிகோ என்றுமாற்றப்பட்டது.
ஆனால் இப்படத்தை பொறுத்த வரை எம்.ஜி.ஆரின் படத்தில் இடம்பெறும் பாடலின் வரிகள் தான் தலைப்பாக வைக்கப்பட் டுள்ளது. இதற்கு எந்த ஆட்சேப னையும் வரவில்லை.

இதில் கதாநாயகியாக நடித்தி ருக்கும் பிரீத்தி பிரபல மாடலாக தொழில் ரீதியாக பணியாற்றி வருகிறார். சிறிய நகர்புற பகுதி பெண்ணாக இதில் நடிக்க கேட்டபோது அவரால் அந்த கதாபாத்திரத்துக்குள் உடனடியாக உள்வாங்கி நுழைய முடியாத நிலை இருந்தது. இதையடுத்து அப்பகுதி பெண்களைப் பார்த்து அவரது நடை, உடை பேச்சு பாவனைகளை பார்த்து அதற்காக தனிபயிற்சி எடுத்துக் கொண்டு பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டியிருந்தது. அந்த பயிற்சிகளுக்கு பின்னர் அவரால் அந்த கதாபாத்திரத்தை வெகு எதார்த்தமாக செய்து முடிக்க முடிந்தது.

படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் குமார் ஒரு இசைய மைப்பாளர் மட்டுமல்ல பாடகரும் ஆவார். அவரே இப்படத்திற்கு இசை பாடல்கள் பொறுப்பையும் ஏற்று இருக்கிறார். உதய் தங்கவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதாகிருஷ்ணன் தனபால் எடிட்டிங் செய்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுமே எதார்த்தமான நடிப்பை தான் வழங்கி இருக்கிறார்கள். அது படத்திற்கு பிளஸ் ஆகவே அமைந்துவிட்டது.

இந்த படம் மூலம் சமுதாயத்துக்கு கருத்து எதுவும் சொல்கிறீர்களா என்கிறார்கள்.  கருத்து எதையும் சொல்லவில்லை. ஆனால் சமுதாயத்தை நோக்கி பல கேள்வி களை நான் எழுப்பி இருக்கிறேன். படம் வெளியான பிறகு பல்வேறு விவாதங்களையும் நிச்சயம். இப்படம் ஏற்படுத்தும்.  மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது
இவ்வாறு இயக்குனர் பிரசாந்த் ராமர் தெரிவித்தார்.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஹீரோ செந்தூர் பாண்டியன் கூறும்போது ,”சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நான் சிறுவயதில் ஆசைப்பட்டது உண்டு. ஆனால் படித்து முடித்த பிறகு எனது படிப்புக்கேற்ற தொழிலை தேர்வு செய்யவே நான் முனைப்பில் இருந்தேன் அந்த நேரத்தில் இப்படத்திற்கான ஆடிஷனில் பங்கேற்கும் அழைப்பு வந்தது. அதை ஏற்று ஆடிஷன் சென்றேன். என்னை இயக்குனர் ஹீரோவாக தேர்வு செய்தார். தொடர்ச்சியாக நான் படபிடிப்பில் கலந்து கொண்டேன் ஆனால் ஒரு வாரம் வரை படப்பிடிப்பில் இருக்கி றேன் என்ற உணர்வே இல்லை. இயக்குனரும் தயாரிப்பாளரும்  மும்முரமாக காட்சிகளை படமாக்கி யதை பார்த்த பிறகு தான் இவர்கள் சினிமா தான் எடுக்கிறார்கள் என்று நான் நம்பினேன். அதன் பிறகு என்னையும் இந்த படத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கதாபாத்திரத்தில் ஈடுபாடு காட்டி அவர்களைப் போலவே நானும் உழைத்தேன்” என்றார்.

பட கதாநாயகி ப்ரித்தி கூறும் போது,” நான் மாடலிங் துறையில் இருப்பதால் எனது நடை  அதற் கேற்ற முறையில்தான் அதாவது கேட் வாக் பாணியில் மாறிவிட்டது. எப்படி அமர வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் என்பதை எல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் மாயவரம் சென்ற பிறகு இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப என்னை நான் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. மேலாடை விலகினால் கூட அது பற்றி நான் கவலைப் படாமல் இருப்பேன். ஆனால் மாயவரம் சென்று அங்குள்ள பெண்கள் எப்படி இருக்கிறார்கள் , அவர்கள் எப்படி உடை உடுத்துகிறார்கள், எப்படி பேசுகி றார்கள், பழகுகிறார்கள் என்பது பற்றி எல்லாம் கவனித்து எனது கதாபாத்திரத்திற்காக நான் முற்றிலுமாக என்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. எனது நடையை கூட அங்குள்ள பெண்கள் எப்படி நடப்பார்களோ அதுபோல் நடக்க பயிற்சி எடுத்து தான் நடித்தேன். அதே சமயம் காற்று அடித்து ஆடை வலகினால் உடனே அதை இழுத்து மூடும் செயலும் எனக்குள் வந்து விட்டது. இதெல்லாம் நான் அந்த கதாபாத் திரத்திற்காக என்னை முழுமை. யாக ஈடுபடுத்திக் கொண்ட உணர்வை ஏற்படுத்தியது ”
என்றார்.

தயாரிப்பாளர் பாடகர் இசைய மைப்பாளர் பிரதீப் குமார் கூறும் போது,” இப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னார் எனக்கு பிடித்திருந்தது என்னையும் அறியாமல் நான் படத்தை தயாரிக்க தொடங்கி விட்டேன். தயாரிப்பில் என் மனைவியும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் பாடல் இசை பொறுப்பை நானே ஏற்றுக் கொண் டேன். முதலில் இப்படத்தை பற்றி பேசும்போது அதில் பாடல்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் நான் தயாரிப்பாளர் ஆன பிறகு நிறைய பாடல்கள் அதில் இடம் பெற செய்ய இயக்குனர் ஒப்புக் கொண்டார்.
நான் ஒரு கதை எழுதி வைத்தி ருக்கிறேன். அதை இயக்குனர் தயாரிப்ப தாக கூறியிருக்கிறார் அது பின்னர் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

Related posts

டென் பின் பந்து வீசும்:தினேஷ்குமாருக்கு நடிகர் மஹத் பரிசு

Jai Chandran

நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ் சிவாஜி திடீர் மரணம்

Jai Chandran

From The Team of KuttyPattas VaadaRaasa

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend