பல்வேறுபடங்களை தயாரித்தளித்த கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன் தயாரிப்பில் உருவான படம் அசுரன்.
இதில் தனுஷ் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். வெற்றி மாறன் இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
பிரகாஷ்ராஜ், கென் கருணாஸ், அம்மு அபிராமி ஆகியோரும் நடித்திருந்தனர்.ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
அசுரன் படம் தற்போது கோவாவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
dhanushkraja @VetriMaaran ‘s
#Asuran has been picked for screening at @IFFIGoa under Indian Panorama category.