Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related posts

இயக்குனர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

Jai Chandran

Finally Revealed – The Actor to Play Mohanlal’s Son in Vrushabha

Jai Chandran

First Look and Motion Poster of Tamil Feature Film Ajinomoto

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend