Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராபர் பட விழாவில் ரம்பாவின் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’.இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் :ஒருவன்’ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் எழுதி உள்ளார். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ். எம்.பாண்டி இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் கே பாக்யராஜ், நடிகர் தியாகராஜன், நடிகைகள் அம்பிகா, ரம்பா , தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, சக்திவேலன்  மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டார்கள். படத்தின் டிரைலரை கே. பாக்யராஜ் , தியாகராஜன் வெளியிட அம்பிகா, ரம்பா பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ். தாணு பேசியதாவது: ராபர்  திரைப்படத்தை பத்திரிகையாளர் கவிதா தயாரிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்புதான் என்னிடம் கூறினார். முதலிலேயே என்னிடம் கூறியிருந்தால் படச் செலவுகளை கட்டுப்படுத்தி எப்படி படப்பிடிப்பு நடத்தியிருக்கலாம் என்பதை கூறி இருப்பேன். படம் முடிந்த பிறகு தான் என்னிடம் அவர் கூறினார். இப்படம் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இதன் ட்ரெய்லர் பார்த்தபோது ரசிக்கும்படி இருந்தது. படமும் அதே போல் ரசிக்கும்படி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படத்தின் கதை,  திரைக்கதையை மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் எழுதி இருக்கிறார். அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ் எம் பாண்டி இயக்கிருக்கிறார்.
இப்படத்தை சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேலன் வெளியிடுகிறார். நல்ல படங்களை வாங்கி வெளியிடுவதில் அவர் திறமை வாய்ந்தவர். அவரது பேச்சை முதன்முறையாக இந்த விழாவில் தான் கேட்டேன். மிகவும் அருமையாக தெளிவாக பேசினார். ராபர் படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் 2000 கோடிக்கு அதிபதியான நடிகை ரம்பா  கலந்து கொண்டிருக்கிறார். இவரது கணவர் எனக்கு நல்ல நண்பர்.  சமீபத்தில் என்னை அவர் சந்தித்தபோது,” ரம்பா சினிமாவில் மீண்டும் நடிக்க விரும்புகிறார். அவருக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ரம்பா மீண்டும் நடிக்க வருவதற்கு வாழ்த்துக்கள். என் படத்தில் கூட அவர் நடிப்பார்.

நடிகர் தியாகராஜன் பேசியதாவது:
ராபர் படத்தின் தயாரிப்பாளராக ஆகியிருக்கும் பத்திரிகையாளர் கவிதா முன்னதாக எனது அலுவலகத்தில் பணி புரிந்திருக்கிறார். அப்போதே அவர் கடுமையாக உழைப்பார். அடுத்து என்ன செய்வது என்ற  சிந்தனையில் இருப்பார். அவரது கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன்தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது . பத்திரிக்கையாளராக, சென்சார் உறுப்பினராக, மேடை தொகுப்பாளினியாக,  தயாரிப்பாளராக அவர் படிப்படியாக வளர்ந்திருக்கிறார்.  ராபர் படத்தின் டிரைலர் அருமையாக இருந்தது. இப்படம் வெற்றி பெறும்.  அடுத்தடுத்து கவிதா தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும்.

நடிகை அம்பிகா பேசியதாவது:
பத்திரிகையாளர்களில் பலரை எனக்கு தெரியும். சிலர் தாக்கி எழுதுபவர்களும் இருக்கி றார்கள். ஆனால் பலர் நல்லவிதமாக சினிமாவைப் பற்றியும், நடிகர் நடிகைகளை பற்றியும் எழுதுவார்கள். அவர்கள் நல்ல உறவுடன் பழகுவார்கள்.  அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பத்திரிகையாளர் கவிதா. எனது குடும்ப நண்பர்களில் ஒருவர். அவர் இன்றைய தினம் ராபர் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தரும் என்று நம்புகிறேன்.

நடிகை ரம்பா பேசியதாவது:

மீண்டும் படங்களில்  நடிக்க வேண்டும் என்பதை
நான் ரகசியமாக வைத்திருந்தேன். அந்த விஷயத்தை இங்கு தயாரிப்பாளர்  எஸ்தாணு வெளிப்படையாக கூறிவிட்டார்.  நல்ல  பத்திரங்கள் வரும்போது நான் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.

ராபர் படத்தை பொறுத்த வரை படத்தின் டிரைலர் எனக்கு பிடித்திருந்தது. படம் நன்றாக உருவாகியிருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இதன் எழுத்தாளர் ஆனந்த கிருஷ்ணன், இயக்குனர் பாண்டி, தயாரிப்பாளர் கவிதா மற்றும் பட  குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் கவிதா பேசியதாவது:
நான் பத்திரிகை  துறையிலிருந்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் நான் பணிபுரியும் தினமலர்  பத்திரிக்கை அதிபர் மற்றும் நிறுவனத்தினர் எனக்கு தந்த சுதந்திரமும் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாகவும். அவரகளுக்கு நான் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

நான் மேடை தொகுப்பாளராக ஆவதற்கு எனக்கு முதலில் வாய்ப்பு தந்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு  சார்தான். அவருக்கும் எனது நன்றி. விழாவில் பங்கேற்று இருக்கும் இயக்குனர் கே பாக்யராஜ், எனக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் நடிகர் தியாகராஜன் சார்,  மேலும் நடிகைகள் அம்பிகா, ரம்பா,  ராபர் ,   படத்தை வெளியிடும் சத்தி ஃபிலிம் பேட்டரி சக்திவேலன் உள்ளிட்டோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ரோ பட இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன்  ராபர் படத்தின் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார். மெட்ரோ படத்தில் நடித்த சத்யா,  ராபர் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.  மார்ச் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகின்றது. அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சக்தி ஃபிலிம் பேக்ட்டரி சக்திவேலன் பேசியதாவது:
ராபர்  படத்தை திரையிட்டு காட்டினார்கள்.  எனக்கு பிடித்திருந்தது. படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தேன். இப்படம் ஒரு படமாக மட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லதொரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வரும் மார்ச் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பேசியதாவது:
மெட்ரோ படத்தை இயக்கியபோது அதில் எப்படி எல்லாம் திருட்டுக்கள் நடக்கிறது, சிசிடிவி கேமராவை முடக்கிவிட்டு எப்படி எல்லாம் திருடுகிறார்கள் என்பது பற்றி எல்லாம் தெளிவாக கூறியிருந்தேன். ராபர் படத்தில் இன்னும் மாறுபட்ட ஒரு கோணத்தை எழுதி இருக்கிறேன். திருட்டுக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் உண்டு. திருட்டு என்பது யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு சென்று தலைமறைவாகி விடுவார்கள். ஆனால்  கொள்ளை என்பது வழிப்பபறியாக நடப்பது. நேரடியாக கத்தியைக் காட்டி மிரட்டி மற்றவரிடம் உள்ள பொருள் நகைகளை கொள்ளை அடுத்துச் செல்வார்கள். இப்படிப்பட்ட சம்பவங்களிலிருந்து பெண்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது பற்றியும் இப்படத்தில் அலசப்பட்டிருக்கிறது. இதில் சத்யா நடித்திருக்கிறார். ராபர் படத்தை பொறுத்தவரை ஹீரோ என்பதெல்லாம் கிடையாது,  எல்லாமே நெகட்டிவ் கதாபாத்திரங்களாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்த கதை டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் எஸ்.எம். பாண்டி என்னிடம் உதவி இயக்குனராக சின்சியராக என்னை விட்டு விலகாமல் இருந்து பணியாற்றியவர். அவரது நேர்மையும் திறமையும் தான் இன்றைக்கு அவரை படத்தின் இயக்குனராக உருவாக்கி இருக்கிறது. மக்கள் ஆதரவுடன் ராபர் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

இயக்குனர் எஸ். எம்.பாண்டி பேசியதாவது:
நான் ரொம்ப உணர்ச்சிவசப் படுபவன். என் குடும்பத்தினர், எனக்கு ஆதரவு அளித்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் தயாரிப்பாளர் எஸ் கவிதா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

நடிகர் சத்யா பேசியதாவது:
நான் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட போது எனக்காக முழு ஒத்துழைப்பு  அளித்து என்னுடனே  நின்றவர் எனது அண்ணன். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அப்பா அம்மா கூட நீ ஏன் சினிமாவில் நடிக்கிறாய் என்று என்னை திட்டி இருக்கிறார்கள். வேறு வேலைக்கு செல்லும்படி கூறி இருக்கிறார்கள். ஆனால் நான் நடிகனாக வேண்டும் என்று கூறியபோது எனது அண்ணன் எனக்கு பக்கபலமாக இருந்து இன்றளவும் உறுதுணையாக இருக்கிறார். நான் இயக்குனர் பாலு மகேந்திரா நடிப்பு கல்லூரியில் பயின்றிருக்கிறேன். அந்தப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டவர் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் கவிதா ஆவார். அப்போது முதல் அவர் என் மீது பாசம் காட்டி என் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இன்றைக்கு இப்படத்தின் மூலம் என்னை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.  அதேபோல் மெட்ரோ படத்தில் எனக்கு நல்லதொரு கதாபாத்திரத்தை தந்து என்னை அடையாளப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன். ராபர் படத்திலும் அவர் கதை திரைக்கதை  எழுதி இருப்பதுடன் தயாரிப்பாளராக இருக்கிறார். என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் கே பாக்யராஜ் பேசியதாவது
பத்திரிகையாளர் கவிதா இப்படம் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். ராபர்  படத்தின் கதை திரைக்கதையை மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். மெட்ரோ படத்தை நான் அப்போதே பார்த்திருக்கிறேன் , ரசித்திருக்கிறேன். அந்த நேரத்திலேயே நான் ஆனந்த கிருஷ்ணனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறி இருக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு அனந்த  கிருஷ்ணன் யார் என்பது கூட தெரியாது, அவர் இயக்கிய மெட்ரோ படம் பிடித்திருந்தால் அவருக்கு நான் வாழ்த்து கூறினேன். தற்போது ராபர்  படத்திற்கு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இருப்பதுடன் இப்படத்தில் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த பாண்டிக்கு இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவர் வாய்ப்பு தந்திருப்பதுடன் அவரே கதையும் தந்திருக்கிறார். இதெல்லாம் திரையுலகில் எளிதாக நடக்கும் காரியம் அல்ல.

மெட்ரோ படம் நகரில் எப்படி எல்லாம் திருட்டு நடக்கிறது, சிசிடிவி கேமராக்கள் எப்படி முடக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டு அதன் பிறகு திருட்டு நடத்துகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக நுணுக்கமாக ஆனந்த  கிருஷ்ணன் கூறியிருந்தார். ராபர் படத்தில் இன்னொரு திருட்டு குறித்து அவர் நுணுக்கமாக கூறியிருப்பார் என்பதை ட்ரெய்லரில் பார்க்கும்போது தெரிகிறது. இது போன்ற படங்கள் மூலம் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் சத்யா ஏற்கனவே மெட்ரோ படத்தில் ஒரு முக்கியமானத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரை பார்க்கும்போதே துறுதுறுவென்று இருக்கிறாரே இவருக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு வரும் என்று நான் அப்போது யூகித்தேன். இந்த படத்தில் சத்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர் கவிதா நிகழ்ச்சி தொகுப்பாளராக அழகு தமிழில் பேசுவார். பல நிகழ்ச்சிகளில் அவர் தொகுத்து வழங்கி நான் பங்கேற்று இருக்கிறேன். அவரது தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றால் பாதி ஆங்கிலத்தில்,  பாதி தமிழில் பேசுவார்கள் . அதையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு நல்ல தமிழில் மேடை தொகுப்பு நிகழ்ச்சியை வழங்கும்  பாணியை கொண்டு வந்தவர் கவிதா தான். இன்றைய தினம் அவர் ராபர் படத்தின் தயாரிப்பாளராக ஆகி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். படம் வெற்றியடைய அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்வை நடிகர்கள் டேனி கோதண்டம் இருவரும் போலீஸ் கூட அணிந்துகொண்டு  புதுமையன முறையில் தொகுத்து வழங்கினார்கள்.

Related posts

விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

நயன்தாரா நடித்த “O2” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

Jai Chandran

குருப்  (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend