Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரண்மனை 3 பேய் படம் குடும்பத்துடன் ரசிக்கலாம்: இயக்குனர் சுந்தர.சி

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சக மான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச் சுவையோடு குடும்பங் களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் பாகங் களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3  திரைப் படம்  உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி  சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க சி.சத்யா  இசையமைக் கிறார் .

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங் களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள் ளனர்.

இந்த படத்தின் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு நடைபெற்றது .

இதில் நடிகர் ஆர்யா பேசியவை:
.அறானை3 படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தேன் இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் சொன்னபோது பேய் படத்தில் எனக்கு எப்படி நடிப்பது என்று தெரிய வில்லையே என்று கூறினேன். அது மிகவும் ஈசிதான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். இப்படத்தில் விவேக்  சாருடன் நடித்தது  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியா தவை. நான் அவரது மிகப் பெரிய ரசிகன். இந்த படத்தில் நடித்த அனை வருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில்   பாடல்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார் சத்யா .இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் உதயநிதிக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிகை ராஷி கண்ணா பேசியது:

இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி ,குஷ்பூ ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தை வெளியிட்டு சப்போர்ட் செய்யும் உதயநிதிக்கு நன்றி .கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .தியேட்டரில் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இசையமைப்பாளர் சி .சத்யா பேசியது:

இந்த படம் எனக்கு 25 வது படம். இசையமைப்பா ளராக இசை அமைத்துள் ளேன். இந்த திரைப்படத் திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப் பட்டது.20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த லாஃடௌன் எனக்கான நாட்களை அதிகப்படுத் தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப் பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை பட  மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன.

நடிகர் மனோபாலா பேசியது:

குஜராத்தில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாக தங்கியி ருந்து படப்பிடிப்பு முடித் தோம். மறக்க முடியாத நினைவுகள். காலையில் 7 மணிக்கு சூட்டிங் சென்று விட்டு இரவு பத்து மணிக்கு திரும்புவோம் . படப்பிடிப்பு போவதே தெரியாது. இதில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது விவேக் சாருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாத வை அவரின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது.

 

இயக்குனர் சுந்தர் சி பேசியது:

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அரண்மனை பாகங்கள் இரண்டும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை  மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான் .ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது .அதற்கான கதையும் .நடிகர்கள் ,தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா .

அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா ராஷி கண்ணா ,சாக்ஷி அகர்q வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.

அரண்மனை பாகம் 1 உதயநிதி  வெளியிட்டார் .தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடு கிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி  மட்டும்தான்.
அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான் .தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமைக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான். என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படம்தான் .படத்தை பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 பிரமாண்ட மாக தயாரிக்கப்பட் டுள்ளது

Related posts

ஹார்ட்டிலே பேட்டரி (வெப் சீரிஸ் விமர்சனம்)

Jai Chandran

DAY 1: Spider-Man: No Way Home film collects 32.67 Crores in India

Jai Chandran

Kadhal Oviyam Fame Actor kannan re-entry

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend