Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அங்கம்மாள் (பட விமர்சனம்)

படம்: அங்கம்மாள்

நடிப்பு: கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன்

தயாரிப்பு:
கார்த்திகேயன் எஸ், ப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல்

இசை: முகமது  மக்பூல்  மன்சூர்

ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்

கதை: பெருமாள் முருகன்

இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா

கதை:
நெல்லை பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் அங்கம்மாள். இவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகனுக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்க மற்றொரு மகன் டாக்டருக்கு படித்துவிட்டு திருமணத்துக்கான ஏற்பாட்டில் இருக்கிறான். அங்கம்மாள் எதார்த்தமாக வாழ்பவர். ஜாக்கெட் அணிவது கிடையாது. ஆண்கள் போல் அயராமல் வயல் வேலை செய்பவர். இரண்டாவது மகன் தனக்கு திருமணம் ஆகி வரப்போகும் மனைவியும் அவரது குடும்பத்தாரும் தனது தாயார் ஜாக்கெட் அணியாமல் இருப்பதைக் கண்டு என்ன நினைப்பார்களோ என்று அஞ்சி தாயை ஜாக்கெட் அணிய சொல்லி வற்புறுத்துகிறார். இதுவே கதையின் பிரதான களமாக இருக்கிறது. மகனின் ஆசையை அங்கம்மாள் நிறைவேற்றினாரா? அல்லது வேறு முடிவு எடுத்தாரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பல்வேறு படங்களில் அம்மா வே டத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம் இப்படத்தில் ஜாக்கெட் அணியாத அந்த காலத்து பெண் போல் அங்கம்மாள் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
அந்த காலத்தில் சில வயதான பெண்கள் பீடி சுருட்டு புகைப்பது வழக்கம். அந்தப் பழக்கத்தையும் கீதா கைலாசம் கையில் எடுத்து சுருட்டு பிடித்து புகையை ஊதி தள்ளுகிறார்.

குடும்பத்துக்கு தான்தான் தலைவி மகன்களும், மருமகளும் தன்னை அனுசரித்துத் தான் நடக்க வேண்டும், தனது சொல்லி படித்தான் கேட்க வேண்டும் என்று அடாவடியாக பிள்ளைகளிடமும், மருமகளிடமும் கீதா கைலாசம் முரட்டுத்தனம் காட்டி நடந்து கொள்வதும், பேசுவதும் அப்படியே அந்த காலத்து கிழவியை உரித்து வைத்திருக்கிறார்.

ஜாக்கெட் அணியாமல் இருப்பது, சுருட்டு புகைப்பது, டிவிஎஸ் 50 ஓட்டுவது போன்றவற்றில் கீதா அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அது ஒர்க்அவுட் ஆகிறது. ஆனால் நடையில், தோற்றத்தில் அவர் தளர்வையோ முதிர்ச்சியோ காட்டாமல் கட்டுமஸ்தாக நடந்து செல்வது, சில இடங்களில் நரைமுடி தெரிவது, இன்னும் சில இடங்களில் நரை இல்லாமல் இருப்பது என்று மேக்கப் மற்றும் பாடி லாங்குவேஜில் முழு கவனம் செலுத்தாதது வேடத்திற்கு மைனஸ்.
இரண்டாவது மகனாக ஹீரோவாக நடித்திருக்கும் சரண் சக்தி தன் தாய் ஜாக்கெட் அணியாமல் இருப்பதும் அடாவடியாக பேசுவதும் எங்கே தான் மணக்கவிருக்கும் பெண்ணின் குடும்பத்தில் தனக்கு அவமரியாதையை ஏற்படுத்தி விடுமோ என உள்ளூர பயபுணர்ச்சியை மிக அருமையாகவே வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
அம்மாவுக்கு அடங்கியும் அதேசமயம் அவரை தன் சொல்படி கேட்க வைக்க நைசாக பேசுவதுமாக நயமான நடிப்பை தந்திருக்கிறார்.

மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி வாயில்லா பூச்சியாக வந்தாலும் கிளைமாக்சில் அம்மாவை எதிர்த்து சடசடவென்று பேசி அடைமழையாக வெளுக்கிறார்.
வயல்வெளியில் அமர்ந்து பரணி நாதஸ்வரம் வாசிப்பது காமெடி சீனாக அமைகிறது. அவர் நாதஸ்வரம் வாசிக்கும்போது சடாரென ஒரு நாகப் பாம்பை அவர் எதிரில் விட்டு, அதைப் பார்த்து அவர் ஓட்டம் பிடிப்பதுபோல் காட்சி அமைத்திருந்தால் காமெடி களைகட்டி இருக்கும்.

முல்லை அரசி, தென்றல் ரகுநாதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கீதா கைலாசத்தை ஒருதலையாக காதலித்து சைட் அடிக்கும் அந்த நடிகர் இதயம் முரளியை ஞாபகப்படுத்தி கலகலkka வைக்கிறார்.

கார்த்திகேயன் எஸ், ப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல் தயாரித்துள்ளனர்.

முகமது மக்பூல் மன்சூர் இசை, அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு கிராமத்து சூழலை கண்ணுக்குள்ளும் காதுக்குள்ளும் பரவச் செய்கிறது.

பெருமாள் முருகன் கதை 80க்கு முந்தைய காலகட்ட நிஜங்களை ஞாபகப்படுத்துகிறது

விபின் ராதாகிருஷ்ணன் படத்தை மிகை இல்லாமல் இயக்கி இருக்கிறார். இந்த காலத்தில்தான் சினிமா தியேட்டர்களில் கூட்டங்கள் குறைவாக காணப்படுகிறது ஆனால் அந்த காலத்திலும் சினிமா தியேட்டரில் கூட்டம் குறைவாக இருப்பது போல் அமைத்திருக்கும் காட்சி அந்த காலத்தில் தியேட்டர்கள் இப்படி காலியாக இல்லையே என்று எண்ண வைக்கிறது.

அங்கம்மாள் – எதார்த்த பிரியர்களுக்கு பிடிக்கும்.

 

Review By

K Jayachandhiran
www.trending cinemas now com

 

Related posts

சிங்கப்பூர் சலூன் (பட விமர்சனம்)

Jai Chandran

லால் சலாம் (பட விமர்சனம்)

Jai Chandran

Samuthirakani, Kathir starrer ‘Thalaikoothal

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend