Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வீரர்களை முடக்கிய கொரோனா.. ஐபிஎல் போட்டிகள் ரத்து :

கொரோனா 2வது அலை ஒரு பக்கம் நாடுமுழுவதும் பரவிகொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின் சுகாதார துறை பல்வேறு நடவடிகைக்கள் எடுத்து வருகின்றன. கடுமையான ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சில மாநிலங்களில் 15 நாட்கள் முழுஊரடங்கு அறிவித்திருக் கிறது.
தமிழகத்திலும் தீவிர கொரோ னா தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா முழு வதும் தினமும் சுமார் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்ற னர்.
இந்நிலையில் வீட்டில் முடங்கிக்கிடப்பவர்கள் கிரிக்கெட் ஐபிஎல் தொடர் பார்த்து ரசித்துக்கொண்டிருந் தனர். கிரிக்கெட் வீரர்களுக்கு கடுமையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிலர் கொரோனா காலகட்டத்தில் ஐபிஎல் நடத்த எதிர்ப்பும் தெரி வித்திருந்தனர். எல்லாவற் றையும் மீறி ஐபிஎல் தொடர்கள் கடந்த சில வார மாக நடத்து வந்தது. தற்போது தொடரில் பங்கேற்றிருக்கும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்படிருப் பட்டிருப்பது கிரிக்கெட் அணியினருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. கடுமை யான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப் பது ஐபிஎல் நிர்வாகம், பிசிசிஐ அமைப்புக்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக் கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட் டிருக்கிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அனைவரும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக் கின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது, இதனால் நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையி லான கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ் ராவுக் கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
யாரும் எதிர்பாராதவிதமாக கொரோனா பரவியிருப்பது கிரிக்கெட் அணியினருக்கி டையே இது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற் கிடையில் சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியிலிருந்து விலகி தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர். தொற்று மேலும் பரவாமலி ருக்க ஐபிஎல் தொடர் போட்டி களை நிறுத்துவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக் கிறது. ஆனால் இது தற்காலிக நிறுத்தமாகவே இருக்கும் ஒரு சில வாரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்தபிறகு மீண்டும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு போட்டிகள் தொடரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

Related posts

Selection Process Begins for Varungala SuperStar 2022

Jai Chandran

ராணா டகுபதி வெளியிட்ட நாக பந்தம் ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

புத்தர் பற்றி பேசும் அமானுஷ்ய படம் 99/66: ரக்ஷிதா பேச்சு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend